நேற்று நிதிஷ்குமார் பீகார் முதலமைச்சராக பொறுப்பேற்ற நிலையில்,இன்று அமைச்சரவைக் கூட்டம் கூடுகிறது.
பாஜக கூட்டணி நடந்து முடித்த சட்டப்பேரவைத் தேர்தலை ஆட்சியமைக்க தேவையான இடங்களை விட அதிக இடங்களில் வெற்றிபெற்றது.பாஜக கூட்டணியில் ஐக்கிய ஜனதாதளம்,விகாஷில் இன்சான் ( Vikassheel Insaan Party ),ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா ( Hindustani Awam Morcha ) உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட்டது.பாஜக 74 இடங்களையும், நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் 43 இடங்களையும், வி.ஐ.பி. மற்றும் எச்.ஏ.எம்.எஸ். கட்சிகள் தலா 4 இடங்களிலும் வெற்றி பெற்றன.
ஏற்கனவே 3 முறை தொடர்ந்து நிதிஷ் முதல்வராக பதவி வகித்த நிலையில் தற்போது நான்காவது முறையாக முதல்வராக நேற்று பதவியேற்றார்.நிதிஷ் குமாருடன் 14 பேர் கொண்ட அமைச்சர்கள் குழுவும் பதவியேற்றது.பாஜக தலைவர்களான தர்கிஷோர் பிரசாத், ரேணு தேவி ஆகியோரும் பீகார் துணை முதல்வர்களாக பதவியேற்றனர்.
புதிய அரசு அமைக்கப்பட்ட பின்னர், முதல் அமைச்சரவைக் கூட்டத்தை நிதிஷ் குமார் தலைமையில் இன்று நடைபெறுகிறது . கூட்டத்தின் போது அமைச்சர்களின் இலாகாக்களைப் பிரிக்கலாம் என்று கூறப்படுகிறது. இது தவிர, கொரோனா வைரஸ் உட்பட பல சிக்கல்கள் விவாதிக்கப்படலாம். அமைச்சரவைக் கூட்டத்தில் துணை முதல்வர்கள் பொறுப்புக்கு ஒப்புதல் அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இதைத் தொடர்ந்து, நவம்பர் 23-ஆம் தேதி சட்டப்பேரவை சிறப்பு அமர்வு கூடுகிறது என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராமேஸ்வரம்: தமிழக மீனவர்களுக்கு எதிரான இலங்கையின் தொடர் கைது நடவடிக்கை, மீனவ குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மீண்டும், எல்லை தாண்டி…
சென்னை: தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு தண்டையார்பேட்டை மெட்ரோ ரயில் சுரங்க…
தெலங்காணா: கடந்த டிசம்பர் 4-ம் தேதி 'புஷ்பா 2' சிறப்பு காட்சியின் திரையிடலின் போது, சந்தியா திரையரங்கில் ஏற்பட்ட கூட்ட…
டெல்லி : இந்திய அணியின் இளம் கிரிக்கெட் வீரர்களான ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், சஞ்சு சாம்சன் போன்ற வீரர்களுக்கு…
கோவை : ஆரோக்கியசாமி சாலை, ராமச்சந்திரா சாலை, டி.பி.ரோடு, லாலி சாலை, தடாகம் சாலை, கவுலிபிரவுன் சாலை, டி.வி.சாமி சாலை,…
சென்னை : விடுதலை 2 திரைப்படம் வெற்றிமாறனின் தலை சிறந்த படைப்புகளின் பட்டியலில் இடம் பெற்றுவிட்டது என்று தான் சொல்லவேண்டும். அந்த…