இன்று பீகாரில் அமைச்சரவைக் கூட்டம் ! இலாகாக்களைப் பிரிக்க வாய்ப்பு

Default Image

நேற்று நிதிஷ்குமார் பீகார் முதலமைச்சராக பொறுப்பேற்ற நிலையில்,இன்று அமைச்சரவைக் கூட்டம் கூடுகிறது.

பாஜக கூட்டணி நடந்து முடித்த சட்டப்பேரவைத் தேர்தலை ஆட்சியமைக்க தேவையான இடங்களை விட அதிக இடங்களில் வெற்றிபெற்றது.பாஜக கூட்டணியில் ஐக்கிய ஜனதாதளம்,விகாஷில் இன்சான் ( Vikassheel Insaan Party ),ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா ( Hindustani Awam Morcha ) உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட்டது.பாஜக 74 இடங்களையும், நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் 43 இடங்களையும், வி.ஐ.பி. மற்றும் எச்.ஏ.எம்.எஸ். கட்சிகள் தலா 4 இடங்களிலும் வெற்றி பெற்றன.

ஏற்கனவே 3 முறை தொடர்ந்து நிதிஷ் முதல்வராக பதவி வகித்த நிலையில் தற்போது நான்காவது முறையாக முதல்வராக நேற்று  பதவியேற்றார்.நிதிஷ் குமாருடன் 14 பேர் கொண்ட அமைச்சர்கள் குழுவும் பதவியேற்றது.பாஜக  தலைவர்களான தர்கிஷோர் பிரசாத், ரேணு தேவி ஆகியோரும் பீகார் துணை முதல்வர்களாக பதவியேற்றனர்.

புதிய அரசு அமைக்கப்பட்ட பின்னர், முதல் அமைச்சரவைக் கூட்டத்தை நிதிஷ் குமார் தலைமையில் இன்று நடைபெறுகிறது . கூட்டத்தின் போது அமைச்சர்களின் இலாகாக்களைப் பிரிக்கலாம் என்று கூறப்படுகிறது. இது தவிர, கொரோனா வைரஸ் உட்பட பல சிக்கல்கள் விவாதிக்கப்படலாம். அமைச்சரவைக் கூட்டத்தில் துணை முதல்வர்கள் பொறுப்புக்கு  ஒப்புதல் அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இதைத் தொடர்ந்து, நவம்பர் 23-ஆம் தேதி சட்டப்பேரவை சிறப்பு அமர்வு கூடுகிறது என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்