பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் 3 கட்டமாக நடைபெறுகிறது.
பீகார் சட்டசபையின் பதவிக்காலம் நவம்பர் 29-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. எனவே, அதற்கு முன்பு அம்மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடத்த வேண்டி உள்ளது.ஆனால், கொரோனா அச்சுறுத்தல் இன்னும் நீடிப்பதால், தேர்தலை தள்ளிவைக்க வேண்டும் என்று ராஷ்டிரீய ஜனதாதளம், லோக் ஜனசக்தி, தேசியவாத காங்கிரஸ் போன்ற கட்சிகள் கோரிக்கை விடுத்தது. ஆனால், தேர்தலை தள்ளிவைக்க தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது. அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தேர்தல் கமிஷன் ஏற்கனவே வெளியிடப்பட்டது.
தற்போது பீகாரில் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தள ஆட்சி வருகின்ற நவம்பர் மாதத்துடன் முடிவடைகிறது. இதனால், 243 தொகுதியில் அக்டோபரில் சட்டசபை தேர்தல் நடைபெறும் என்று தகவல் வெளியாகியது. இந்நிலையில் இன்று டெல்லியில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், பீகார் சட்டமன்றத் தேர்தலில் வாக்குப் பதிவிற்கான நேரம் ஒரு மணி நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது.காலை 7 மணியில் இருந்து மாலை 6 மணி வரை வாக்குபதிவு நடைபெறும். வாக்குப் பதிவின் கடைசி ஒரு மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்யலாம்.பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் நடைமுறைகள் செயல்பாட்டுக்கு வருகிறது.அரசியல் கட்சியினர் வாக்கு சேகரிக்க செல்லும்போது 5 நபர்கள் மட்டுமே செல்ல வேண்டும். பீகார் சட்டப்பேரவை தேர்தலில் ஆன்லைன் மூலம் வேட்பு மனு தாக்கல் செய்யலாம்.பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் 3 கட்டமாக நடைபெறும் என்று தெரிவித்துள்ளார். முதல் கட்டமாக 71 தொகுதிகளுக்கு அக்டோபர் 28-ஆம் தேதி தேர்தல் நடைபெறும் . 2வது கட்டமாக 94 தொகுதிகளுக்கு நவம்பர் 3 -ஆம் தேதி தேர்தல் நடைபெறும். 3வது கட்டமாக 78 தொகுதிகளுக்கு நவம்பர் 7-ஆம் தேதி தேர்தல் நடைபெறும். நவம்பர் 10-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது என்று அறிவித்துள்ளார்.
சென்னை : பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள டிராகன் திரைப்படம் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக படக்குழு…
சென்னை : தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட் ஜார்ஜ்…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதற்காக இன்று மும்பையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றும்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட்…
டெல்லி : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி டெல்லி மாநிலத்தில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக பொதுத்தேர்தல்…