நாளை பீகாரில் இறுதி மற்றும் 3-ஆம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது.
243 தொகுதிகளை அடங்கிய பீகாரில்,சட்டப்பேரவைத் தேர்தல் 3 கட்டமாக நடைபெறும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்தது. அதன்படி, முதல் கட்டமாக 71 தொகுதிகளுக்கு அக்டோபர் 28-ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது . 2வது கட்டமாக 94 தொகுதிகளுக்கு நவம்பர் 3 -ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது.நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பாஜக கூட்டணி வைத்து போட்டியிடுகிறது.மேலும் காங்கிரஸ் மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கூட்டணியும் போட்டியிடுகிறது
இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில் ,3வது கட்டமாக 16 மாவட்டங்களில் உள்ள 78 தொகுதிகளுக்கு நாளை ( நவம்பர் 7-ஆம் தேதி) தேர்தல் நடைபெறுகிறது.நேற்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் ஓய்ந்துள்ளது.ஆகவே தேர்தலுக்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.நவம்பர் 10-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது .இறுதி மற்றும் 3-வது கட்ட தேர்தல் களத்தில் மொத்தம் 1208 பேர் வேட்பாளர்களாக உள்ளனர்.நாளை நடைபெறும் 78 தொகுதிகளுக்கான தேர்தலில் 72 தொகுதிகள் பதற்றமானவை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…
சென்னை : முன்னாள் பாலிவுட் நடிகையும், டிவி ரியாலிட்டி ஷோ 'பிக் பாஸ்' இன் மூலம் பிரபலமான சனா கான்…