Bihar Election 2020: நாளை இறுதி கட்ட தேர்தல்

Default Image

நாளை பீகாரில் இறுதி மற்றும் 3-ஆம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. 

243  தொகுதிகளை அடங்கிய பீகாரில்,சட்டப்பேரவைத் தேர்தல் 3 கட்டமாக நடைபெறும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்தது. அதன்படி, முதல் கட்டமாக 71 தொகுதிகளுக்கு அக்டோபர் 28-ஆம் தேதி  தேர்தல் நடைபெற்றது . 2வது கட்டமாக 94 தொகுதிகளுக்கு நவம்பர் 3 -ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது.நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பாஜக கூட்டணி வைத்து போட்டியிடுகிறது.மேலும் காங்கிரஸ் மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கூட்டணியும் போட்டியிடுகிறது

இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில் ,3வது கட்டமாக  16 மாவட்டங்களில் உள்ள 78 தொகுதிகளுக்கு நாளை ( நவம்பர் 7-ஆம் தேதி) தேர்தல் நடைபெறுகிறது.நேற்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் ஓய்ந்துள்ளது.ஆகவே  தேர்தலுக்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.நவம்பர் 10-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது .இறுதி மற்றும் 3-வது கட்ட தேர்தல் களத்தில் மொத்தம் 1208 பேர் வேட்பாளர்களாக உள்ளனர்.நாளை நடைபெறும் 78 தொகுதிகளுக்கான தேர்தலில் 72 தொகுதிகள் பதற்றமானவை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்