பீகார் சட்டப் பேரவை தேர்தல் ! காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் இன்று வெளியீடு
பீகார் தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகிறது.
பீகாரில் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தள ஆட்சி வருகின்ற நவம்பர் மாதத்துடன் முடிவடைகிறது.எனவே 243 தொகுதிகளை அடங்கிய பீகாரில் ,பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் 3 கட்டமாக நடைபெறும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
பீகாரில் ஆளும் ஐக்கிய ஜனதாதளம் கட்சியுடன் பாஜக கூட்டணி வைத்துள்ளது.காங்கிரஸ் மற்றும் லாலு பிரசாத்தின் ராஷ்டிரீய ஜனதாதளம் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து உள்ளது. இந்த கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு 70 இடங்கள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதே கூட்டணியில் உள்ள நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 4 தொகுதிகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ,சிபிஐ எம்எல் கட்சிக்கு 19 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.ராஷ்ட்ரீய ஜனதாதளம் 144 இடங்களில் போட்டியிடுகிறது. இந்நிலையில் 70 இடங்களில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகிறது.