பீகார் தேர்தல்: தொடங்கியது இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு.. ஆர்வமாக வாக்களிக்கும் மக்கள்!
பீகாரில் 3 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், இன்று காலை 7 மணி முதல் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது.
பீகாரில் தற்பொழுது நடைபெற்று வரும் நிதிஷ் குமார் தலைமையிலான ஆட்சி முடிவடையவுள்ள நிலையில், அம்மாநிலத்தில் மூன்று கட்டமாக தேர்தல் நடைபெற்று வருகிறது. முதல் கட்ட வாக்குப்பதிவு கடந்த மாதம் 28 ஆம் தேதி நடைபெற்ற நிலையில், இரண்டாம் கட்ட வாக்கு பதிவு இன்று காலை 7 மணி முதல் தொடங்கியது.
இன்று 17 மாவட்டங்களில் உள்ள 94 சட்டசபை தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறதாகவும், இந்த தொகுதிகளில் மொத்த 2,85,50,285 பேர் உள்ளனர். இவர்கள் வாக்களிக்க 41,362 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் மொத்தம் 1,463 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். பீகார் சட்டமன்ற தேர்தலின் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு, நவம்பர் 7 ஆம் தேதி நடைபெறவுள்ளது. மேலும் வாக்கு எண்ணிக்கை, அடுத்த மாதம் 10 ஆம் தேதி நடைபெறவுள்ளது, குறிப்பிடத்தக்கது.