மோடியின் நண்பர் அதானியின் மெகா சைஸ் ஊழல்… ராகுல் காந்தி கடும் விமர்சனம்.!

Rahul Gandhi

சென்னை: பாஜக ஆட்சியில் நிகழ்ந்த மிகப்பெரிய நிலக்கரி ஊழல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது- ராகுல் காந்தி.

நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் மேடை பேச்சுக்களில் மட்டுமல்லாது டிவி நேர்காணல்கள், சமூக வலைதளங்கள் மூலமும் அரசியல் தலைவர்களின் பிரச்சாரமும், மற்ற கட்சிகள் மீதான விமர்சனங்களும் அனல் பறக்கின்றன. ஏற்கனவே, பிரதமர் மோடி முன்னர் பேசுகையில், காங்கிரஸ் கட்சிக்கு அதானி, அம்பானி டெம்போவில் பணம் அனுப்புகின்றனர் என கடுமையாக விமர்சித்தார்.

தற்போது அதேபோல, காங்கிரஸ் கட்சி இளம் தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் ஓர் பதிவை இட்டுள்ளார். அதில், நிலக்கரியை அதானி விற்பனை செய்ததில் மோசடி செய்ததாக சந்தேகிக்கப்படுகிறது என்ற தலைப்பில் வெளியான செய்தி புகைப்படத்தை பகிர்ந்து விமர்சனம் செய்துள்ளார்.

அதற்கு கிழே, பல வருடங்களாக நடந்து வரும் இந்த மோசடி மூலம் பிரதமர் மோடியின் அபிமான நண்பன் அதானி மூன்று மடங்கு விலைக்கு குறைந்த தர நிலக்கரியை விற்று பல ஆயிரம் கோடி ரூபாயை கொள்ளையடித்துள்ளார் என தரவுகள் வெளியாகியுள்ளன.

இந்த மோசடி குறித்து, அமலாக்கத்துறை, CBI மற்றும் வருமானவரித்துறை விசாரிக்காமல் அமைதியாக இருக்க காரணம் என்ன.? இதனை மறைக்க எத்தனை டெம்போக்கள் (டெம்போவில் பணம்) பயன்படுத்தப்பட்டன பிரதமர் மோடி கூறுவாரா.? ஜூன் 4ஆம் தேதிக்குப் பிறகு, இந்த மெகா ஊழலை I.N.D.I.A  அரசு விசாரித்து, பொதுமக்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட ஒவ்வொரு ரூபாய்க்கும் கணக்கை கூறும் என ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live news tamil
Congress Leader Selvaperunthagai say about TVK Vijay
Heart Donation
gold price
KL Rahul - Virat Kohli
TikTok Ban in USA
Coimbatore Tidel Park