#BIGBREAKING: மணிப்பூர் வன்முறை..! 30 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை..!
மணிப்பூரில் சுமார் 30 பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
மணிப்பூர் மாநிலத்தில் குக்கி மற்றும் மைத்தேயி என்ற இரு இன மக்களிடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறியது. இந்த வன்முறையில் வீடுகள், தேவாலயங்கள் உள்ளிட்டவை தீ வைத்து எரித்து நாசமாக்கப்பட்டன. மேலும், வன்முறையின் போது 71 பேர் உயிரிழந்ததோடு, 230-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இதன்பின், மாநிலம் முழுவதும் பல நாட்களாக வன்முறை தொடர்ந்து வருவதால், நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர மத்திய அரசு துணை ராணுவப் படைகளை அனுப்பியது. இந்நிலையில், மணிப்பூரில் சுமார் 30 பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர் என்று முதல்வர் பிரேம் சிங் தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் மீது அதிநவீன ஆயுதங்கள் மூலம் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதையடுத்து பாதுகாப்பு படையினர் எடுத்த அதிரடி நடவடிக்கையில் 30 பயங்கரவாதிகள் வெவ்வேறு பகுதிகளில் நடந்த தாக்குதலில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். அதில் சிலர் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று முதல்வர் என் பிரேன் சிங் கூறியுள்ளார்.