டெல்லியில் விவசாயிகள் பேரணியில் ஏற்பட்டதை அடுத்து நள்ளிரவு முதல் 144 தடை உத்தரவு அமல் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் டிராக்டர் பேரணியை அனுமதித்த முன்பே தொடங்கியதால் விவசாயிகளை கலைக்க காவல்துறை கண்ணீர் புகை குண்டு வீசினர். மேலும் விவசாயிகளுக்கும் காவல்துறைக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் தடியடி நடத்தப்பட்டது. இதையடுத்து, செங்கோட்டையில் உள்ள ஒரு கொடி கம்பத்தில் ஏறி விவசாயிகள் விவசாயக் கொடியை ஏற்றினர். வன்முறை தீவிரமடைந்து வருவதை அடுத்து, டெல்லி முழுவதும் போலீசார் குவித்து பலத்த பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், டெல்லியில் விவசாயிகள் பேரணியில் வன்முறை ஏற்பட்டதை அடுத்து இன்று நள்ளிரவு முதல் 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடியும்வரை 144 தடை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்க இன்னும் 2 நாட்களே உள்ளே நிலையில், ஏற்பட்ட வன்முறையால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் நோக்கில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
டெல்லி : 13 மாநிலங்களில் 48 சட்டமன்ற தொகுதிகளில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவை இடைத்தேர்தல் முன்னிலை குறித்த நிலவரம் வெளியாகி…
சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் [நவம்பர் 23] இன்றைக்கான எபிசோடில் ரோகினியை மலேசியாவிற்கு டிக்கெட் போட சொல்லும் விஜயா. .அதிர்ச்சியில் …
தஞ்சை : மாவட்டத்தில் அ.தி.மு.கவின் கள ஆய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணியும், திண்டுக்கல்…
மும்பை : மகாராஷ்டிரா மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் எண்ணப்பட்டு முன்னணி நிலவரங்கள் வெளியாகி வருகின்றன. இதில் காலை முதலே…
ராஞ்சி : ஜார்கண்டில் மொத்தமாக உள்ள 81 தொகுதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. அதன்படி, முதல் கட்டமாக கடந்த…
சென்னை : தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரம் அதாவது மதியம் 1 மணி வரை பல மாவட்டங்களில் லேசான…