#BigBreaking:இந்தியாவில் அதிர்ச்சியை கொடுத்த கொரோனா 3,285 உயிரிழப்பு;362,902 பேர் பாதிப்பு
இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் 362,902 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.3,285 பேர் உயிரிழப்பு.
இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் 362,902 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், இதுவரை மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17,988,637 உயர்ந்துள்ளது.இந்தியாவில் கொரனோ வைரஸ்க்கு தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 29,79,768 ஆக உயர்ந்துள்ளது.இதுவரை 14,807,704பேர் குணமடைந்துள்ளனர்.
- இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் மொத்தம் 3,285 பேர் உயிரிழந்துள்ளனர்.இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 201,165 ஆக உயர்ந்துள்ளது.
- மகாராஷ்டிராவில் கடந்த 24 மணி நேரத்தில் மகாராஷ்டிராவில் 66,358 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது மற்றும் 900 பேர் உயிரிழந்துள்ளனர்.
- கர்நாடகாவில் 31,830 பேருக்கும் ,டெல்லியில் 24,149 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.டெல்லியில் 6வது நாளாக உயிரிழப்பு 300 ஐ கடந்துள்ளது.
- தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் புதிதாக 15,830 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது 77 பேர் உயிரிழந்துள்ளனர்.
- அதிகம் பாதிக்கப்பட்டுள்ள ஆறு மாநிலங்கள் மகாராஷ்டிரா (4,410,085), கேரளா (1,405,655), கர்நாடகா (1,400,775), உத்தரபிரதேசம் (1,086,625), தமிழ்நாடு (1,081,988), மற்றும் டெல்லி (1,047,916).