பிளாஸ்டிக் தொழிற்சாலையில் பெரும் தீவிபத்து..! 15 தீயணைப்பு வாகனங்கள் குவிப்பு..!
குஜராத் மாநிலத்தில் உள்ள பிளாஸ்டிக் தொழிற்சாலையில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
குஜராத் மாநிலம் பரூச் பகுதியில் உள்ள பிளாஸ்டிக் தொழிற்சாலையில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டுள்ளது. குஜராத் தொழில் வளர்ச்சிக் கழகம் (ஜிஐடிசி) பகுதியில் உள்ள நர்மதா பிளாஸ்டிக் பேக்கேஜிங் தொழிற்சாலையில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
#WATCH | A massive fire broke out at a packaging company in Bharuch GIDC, Gujarat.
More than 5 fire tenders are present on the spot pic.twitter.com/fAY3DQXm8p
— ANI (@ANI) March 22, 2023
இந்த தீ விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். தீயை அணைப்பதற்காக 15 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டுள்ளது. ஆனால் நெருப்பால் ஏற்பட்ட கரும் புகை மூட்டம் அப்பகுதி முழுவதும் பரவியதால் தீயை அணைக்கும் முயற்சி கடினமாக உள்ளது.
#UPDATE | A massive fire broke out in the Narmada plastic packaging factory. Fire officials, police present at the spot. Efforts are being made to extinguish the fire with water and foam. Around 15 fire tenders are present here. As of now, no casualty has been reported: Leena… pic.twitter.com/d8sCgy0l1V
— ANI (@ANI) March 22, 2023
இந்த விபத்து குறித்து காவல் ஆய்வாளர் (எஸ்பி) லீனா பாட்டீல் கூறுகையில், “தீ அதிகமாக உள்ளதால் தண்ணீர் மற்றும் நுரை கொண்டு தீயை அணைக்கும் முயற்சி தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்பொழுது வரை இந்த விபத்தில் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை.” என்று தெரிவித்தார்.