இந்தியா அமெரிக்கா இடையிலான ராணுவ ஒத்துழைப்பை முன்னெடுத்துச் செல்ல மேலும் ஒருங்கிணைந்து பாடுபட தயாராக இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் தொலைபேசி வாயிலாக று உரையாடினார்.இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,அதிபர் பைடனின் பதவிக்காலத்திற்கு அவருக்கு வாழ்த்துத் தெரிவித்த பிரதமர், இந்திய-அமெரிக்க உத்திசார் கூட்டுறவை மேலும் மேம்படுத்துவதற்கு, அவருடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பை எதிர்நோக்கியிருப்பதாக தெரிவித்துள்ளார்.
பிராந்திய அளவிலான வளர்ச்சிகளையும், புவியியல்-அரசியல் ரீதியான விஷயங்களையும் இரண்டு தலைவர்களும் விரிவாக ஆலோசனை செய்தனர். ஜனநாயக விழுமியங்களையும், பொதுவான உத்திசார் நலன்களையும் கட்டிக்காப்பதில் இந்திய-அமெரிக்க கூட்டுறவின் கடப்பாட்டை இருவரும் உறுதிப்படுத்தினர். விதிகள் அடிப்படையிலான சர்வதேச ஒழுங்கையும், சுதந்திரமான, வெளிப்படையான, உள்ளடக்கத்தன்மையுடன் கூடிய இந்திய-பசிபிக் பிராந்தியத்தையும் உறுதி செய்வதற்காக ஒத்த கருத்துடைய நாடுகளுடன் இணைந்து பணியாற்றுவதன் முக்கியத்துவத்தை இரண்டு தலைவர்களும் வலியுறுத்தினர்.
உலக பருவநிலை மாற்றம் என்ற சவாலை எதிர்கொள்வதற்கான முக்கியத்துவத்தை, பிரதமரும், அதிபர் பைடனும் அழுத்தமாக எடுத்துரைத்தனர். பாரீஸ் உடன்படிக்கையை திரும்பவும் பின்பற்றுவது என்ற பைடனின் முடிவை வரவேற்ற பிரதமர் மோடி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் உயர் இலக்குகளை இந்தியா தனக்குத்தானே வகுத்துக் கொண்டுள்ளதை கோடிட்டுக் காட்டினார். இந்த ஆண்டு ஏப்ரலில் பருவநிலை தலைவர்கள் உச்சி மாநாட்டை ஏற்பாடு செய்வதற்கான அதிபர் பைடனின் முன்முயற்சியை வரவேற்ற பிரதமர், அதில் பங்கேற்பதை எதிர்நோக்கியிருப்பதாகத் தெரிவித்தார்.அதிபர் பைடனும், டாக்டர் ஜில் பிடனும் இந்தியாவுக்கு, கூடிய விரைவில் வருகை தர வேண்டுமென்று பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் மற்றும் பாஜக எம்பிக்கள் தனி தனியாக ஆர்ப்பாட்டத்தில்…
டெல்லி : போனை தயாரிக்கும் வளர்ச்சியில் இந்தியா தற்போது அசுரத்தனமான வளர்ச்சியை கண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால். இந்தியாவில் தயாரிக்கப்படும் மொபைல் போன்களை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் சமயத்தில் ஓடிசா மாநிலம் பால்சோர் மக்களவை தொகுதி பாஜக எம்பி பிரதாப் சந்திர…
சென்னை : சூர்யாவின் திரைப்பயணத்தில் இயக்குநர் பாலாவுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது என்றே சொல்லலாம். அதற்கு முக்கியமான காரணமே சூர்யா ஆரம்ப…