சீனாவுக்கு ரூ.900 கோடியில் சைக்கிள் ஏற்றுமதி.. ஒப்பந்தத்தை ரத்து செய்த பிரபல சைக்கிள் நிறுவனம்!
சீனாவுடனான ரூ.900 கோடி மதிப்பிலான சைக்கிள் ஏற்றுமதி ஒப்பந்தத்தை ஹீரோ சைக்கிள் நிறுவனம் ரத்து செய்தது.
லடாக், கல்வான் எல்லைப்பகுதியில் இந்தியா-சீனா இடையே நடைபெற்ற தாக்குதலில் இந்திய வீரர்கள் 20 பேர் உயிரிழந்த சம்பவம், நாடெங்கும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதன்காரணமாக, சீனப் பொருட்களைத் தடை செய்ய வேண்டும் என்ற குரல், மக்களிடையே கடந்த சில நாட்களாக ஓங்கியுள்ளது.
லடாக் எல்லையில் டிக் டாக், ஷேர் இட், ஹலோ, லைக், யூசி பிரவுசர், உள்ளிட்ட 59 செயலிகளுக்குத் தடை விதிப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி, டிக் டாக், ஹலோ உள்ளிட்ட செயலிகளை கூகுள் பிலே ஸ்டார் மற்றும் ஆப் ஸ்டோரிகளில் இருந்து நீக்கப்பட்டது.
இந்நிலையில், பஞ்சாப்பை தலைமையாக கொண்டு செயல்படும் ஹீரோ சைக்கிள் நிறுவனம், சீனாவுக்கு ரூ.900 கோடியில் சைக்கிள் ஏற்றுமதி செய்யவுள்ளதாக ஒப்பந்தம் செய்துள்ளது. ஆனால், தற்பொழுது சீன பொருட்களை புறக்கணித்து வரும் காரணத்தினால், இந்த சைக்கிள் ஒப்பந்ததை ஹீரோ நிறுவனம் ரத்து செய்துள்ளது.