ஸ்வாதி மாலிவால் விவகாரம்.! பிபவ் குமாரை கைது செய்த டெல்லி காவல்துறை.!
சென்னை: ஸ்வாதி மாலிவால் விவகாரத்தில் பிபவ் குமார் டெல்லி காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த மே 13ஆம் தேதி ஆத்மி எம்பி ஸ்வாதி மாலிவால், டெல்லியில் உள்ள முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இல்லத்தில், கெஜ்ரிவால் உதவியாளர் பிபவ் குமாரால் தாக்கப்பட்டதாக, மே 16ஆம் தேதி டெல்லி காவல்துறையால் வழக்கு பதியப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் கீழ் நேற்று டெல்லி காவல்துறை முன்பு ஸ்வாதி மாலிவால் ஆஜராகி விளக்கம் அளித்தார். அதன் பிறகு, தற்போது முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமாரை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர்.