130 கோடி இந்தியர்களின் இதயங்களில் சிறப்பிடம் பெற்றுள்ளது பூடான் -பிரதமர் நரேந்திர மோடி

பூடான் 130 கோடி இந்தியர்களின் இதயங்களில் சிறப்பிடம் பெற்றுள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக பூடான் சென்றார். அங்கு சென்ற பிரதமர் நரேந்திரமோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பூடான் பிரதமர் லோட்டே ஷெரிங்குடனான சந்திப்பிற்கு பின் பிரதமர் நரேந்திர மோடி பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்.
அப்பொழுது அவர் பேசுகையில்,130 கோடி இந்தியர்களின் இதயத்தில் சிறப்பிடம் பெற்றுள்ளது பூடான்.பூடான் வளர்ச்சிக்கு பங்களிப்பதில் இந்தியா மகிழ்ச்சி அடைகிறது என்று பேசினார்.