பஞ்சாப் நேஷனல் வங்கிடம் இருந்து ரூ.3,800 கோடி மோசடி செய்த பூஷண் பவர் நிறுவனம் !
பூஷண் பவர் அண்ட் ஸ்டீல் நிறுவனம் பஞ்சாப் நேஷனல் வங்கியிடம் இருந்து ரூ .3,800 கோடி கடன் வாங்கி உள்ளது.அந்த கடன் தொகையை திருப்பி தரவில்லை என பஞ்சாப் நேஷனல் வங்கி ரிசர்வ் வங்கிடம் புகார் கொடுத்து உள்ளது.
இந்த புகாரில் பூஷண் பவர் அண்ட் ஸ்டீல் நிறுவனம் பஞ்சாப் நேஷனல் வங்கியின் கிளைகளான துபாய் ,ஹாங்காங் ,சண்டிகர் ஆகிய கிளைகளில் இருந்து ரூ .3,800 கோடி வாங்கியதாகவும் கூறி உள்ளது.
இந்நிலையில் பன்னாட்டு ஆடிட் விசாரணையை சி பி ஐ அதிகாரிகள் மேற்கொள்ள உள்ளனர். பூஷண் பவர் அண்ட் ஸ்டீல் நிறுவனத்தின் இயக்குனர் மீது முதல் குற்ற பத்திரிக்கை பதிவு செய்து விசாரணை தொடக்கி உள்ளது.
நீரவ் மோடிக்கு ஏற்கனவே ரூ.14 ஆயிரம் கோடி கடன் கொடுத்து மோசடியில் சிக்கி தவித்து வரும் பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு இது இரண்டாவது முறையாக மீண்டும் சிக்கி உள்ளது.
இந்நிலையில் கடந்த வாரம் மத்திய நிதி மோசடி தடுப்பு குழுவான sfio உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 70,000 பக்கம் கொண்ட அறிக்கையில் பூஷண் பவர் அண்ட் ஸ்டீல் நிறுவனத்தின் மீது நிதி மோசடி தொடர்பான குற்றம் சாற்றப்பட்டு உள்ளது.