#Breaking : குஜராத்தில் 18வது முதல்வராக பதவியேற்றார் பூபேந்திர ரஜினிகாந்த் படேல்.!
குஜராத்தின் 18வது முதலமைச்சராக பூபேந்திர ரஜினிகாந்த் படேல் பதவியேற்றார்.
நடந்து முடிந்த குஜராத் சட்டமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 182 தொகுதிகளில் 156 தொகுதிகளை கைப்பற்றி இதுவரை இல்லாத அளவுக்கு தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளது பாரதீய ஜனதா கட்சி.
தொடர்ந்து 7வது முறையாக பாஜக குஜராத்தில் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. இந்நிலையில், கடந்த ஆட்சியில் முதல்வராக இருந்த பூபேந்திர ரஜினிகாந்த் படேல் தான் இரண்டாவது முறையாக இன்று மீண்டும் முதல்வராக பொறுப்பேற்று உள்ளார்.
குஜராத் ஆளுநர் ஆச்சார்யா தேவ்ரத் பூபேந்திர படேலுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். குஜராத்தின் 18வது முதலமைச்சராக பூபேந்திர ரஜினிகாந்த் படேல் பதவியேற்றார். இந்த பதவியேற்பு விழாவில் சிறப்பு அழைப்பாளராக பிரதமர் மோடி மற்றும் உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.