பூமி பூஜை.. அத்வானி, ஜோஷிக்கு அழைப்பு இல்லை .. உமாபாரதிக்கு அழைப்பு.!
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ராமர் கோயிலில் அடிக்கல் நாட்டு விழா வருகின்ற 05-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவில் பிரதமர் வருகையையொட்டி அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
மேலும், பாஜக மூத்த தலைவர்கள் பலர் கலந்துகொள்ள உள்ள நிலையில் எல்.கே அத்வானி மற்றும் முரளி மனோகர் ஜோஷி ஆகியோருக்கு அழைப்பு கொடுக்கவில்லை என கூறப்படுகிறது.
கடந்த 1992-ம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் அத்வானி, ஜோஷி மற்றும் உமா பாரதி ஆகியோர் அடங்குவார்கள். ஆனால், பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட உமாபாரதி விழாவில் கலந்து கொள்ள அழைப்பு கொடுக்கப்பட்டுள்ளது
கடந்த வாரம் லக்னோவில் உள்ள சிறப்பு சி.பி.ஐ நீதிமன்றத்தில் காணொளி மூலம் அத்வானி மசூதி இடிப்பது தொடர்பாக வாக்குமூலம் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.