நன்றி உள்ளவளாக இருப்பேன் – மக்களுக்கு நன்றி தெரிவித்த மம்தா…!

Published by
Rebekal

பவானிப்பூர் இடைத்தேர்தலில் தான் வெற்றி பெற்றதற்காக தனக்கு வாக்களித்த மக்களுக்கு மம்தா பானர்ஜி நன்றி தெரிவித்துள்ளார்.

கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள பவானிப்பூர் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த பவானிப்பூர் தொகுதியில் மம்தா பானர்ஜிக்கு எதிராக பாஜகவை சேர்ந்த பிரியங்கா திப்ரேவால் போட்டியிட்டார். இந்த இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்ற நிலையில் 84, 709 வாக்குகள் பெற்று மம்தா பானர்ஜி அவர்கள் வெற்றி பெற்றுள்ளார்.

தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பிரியங்காவை விட 58,832 வாக்குகள் அதிகம் பெற்று இவர் வெற்றி பெற்றுள்ளார். இவரது வெற்றியை அவரது ஆதரவாளர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், வெற்றி செய்தி அறிவிக்கப்பட்ட பின் தொண்டர்கள் மத்தியில் பேசிய மம்தா பானர்ஜி அவர்கள், இடைத்தேர்தலில் வெற்றி பெற வைத்த வாக்காளர்களுக்கு நன்றி, பவானிப்பூர்  தொகுதியில் 58,832 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளேன்.

தொகுதியின் ஒவ்வொரு வார்டிலும் வெற்றி பெற்றுள்ளேன். முன்பு நந்திகிராம் தொகுதியில் நான் தோல்வியடைந்தது ஒரு சதி வேலை, தேர்தல் தொடங்கியதிலிருந்து மத்திய அரசு என்னை பதவியிலிருந்து அகற்ற பல்வேறு சதித் திட்டங்களைத் தீட்டியது. மேலும் நான் தேர்தலில் போட்டியிடக்கூடாதவாறு என் காலில் காயமும் ஏற்பட்டது. இருப்பினும் எங்களுக்கு வாக்களித்த பொதுமக்களுக்கும், 6 மாதங்களுக்குள் தேர்தல் நடத்திய தேர்தல் ஆணையத்திற்கும் நான் நன்றியுள்ளவளாக இருப்பேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Recent Posts

பொங்கல் ரேஸில் இருந்து விலகுகிறதா வணங்கான்? குழப்பத்தில் படக்குழு!

பொங்கல் ரேஸில் இருந்து விலகுகிறதா வணங்கான்? குழப்பத்தில் படக்குழு!

சென்னை : ஆண்டுதோறும் பொங்கல்பண்டிகையை முன்னிட்டு பல படங்கள் வெளியாவது உண்டு. அப்படி தான் அடுத்த ஆண்டு (2025) பொங்கல் பண்டிகையை…

39 seconds ago

அன்புமணி vs ராமதாஸ் : “உனக்கு விருப்பம் இல்லைனா அவ்வளவு தான்”..மேடையில் நடந்தது என்ன?

புதுச்சேரி : பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டம் இன்று (டிசம்பர் 28) புதுச்சேரி நாவற்குளம் நெடுஞ்சாலையில்,…

47 minutes ago

நீ ஜெயிச்சிட்ட மாறா! சதம் விளாசிய நிதிஷ் குமார் ரெட்டி…கண்கலங்கிய தந்தை!

மெல்போர்ன் : சினிமா படத்தில் வரும்  "இங்க வாய்ப்புன்றது நம்முளுக்கு அவ்ளோ சீக்கிரம் கிடைக்கிறது இல்ல இது நம்ப ஆட்டம்…

48 minutes ago

ஞானசேகரன் குறித்து மா. சுப்பிரமணியன் ஏன் விளக்கமளிக்கவில்லை? அண்ணாமலை கேள்வி!

சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில்  மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், இந்த சம்பவம்…

2 hours ago

ராமதாஸ் – அன்புமணி மோதல் : “எல்லாம் சரியாகிவிடும்”..எம்.எல்.ஏ.அருள் பேச்சு!

சென்னை : இன்று நடைபெற்ற பாமக பொதுக்குழு அந்த கூட்டத்தில் இளைஞரணி தலைவர் நியமனம் செய்யப்படுவது தொடர்பாக ராமதாஸ்- அன்புமணி…

2 hours ago

தந்தை ராமதாஸ் உடன் வார்த்தை மோதல்! பனையூரில் தனி அலுவலகம் தொடங்கிய அன்புமணி!

விழுப்புரம் : இன்று பாமக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி மற்றும் பாமக…

3 hours ago