மேற்குவங்க பவானிப்பூர் இடைத்தேர்தலில் போட்டியிட அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி வேட்புமனு தாக்கல் செய்தார்.
மேற்குவங்க பவானிப்பூர் இடைத்தேர்தலில் போட்டியிட திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவரும், முதலமைச்சருமான மம்தா பானர்ஜி வேட்புமனு தாக்கல் செய்தார். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் பாஜகவின் சுவேந்து அதிகாரியிடம் தோல்வியுற்ற மம்தா பானெர்ஜி பவானிப்பூரில் போட்டியிடுகிறார்.
பவானிப்பூர் இடைத்தேர்தலில் மம்தா பானர்ஜியை எதிர்த்து பாஜகவின் பிரியங்கா திப்ரிவால் போட்டியிடுகிறார். மேற்கு வங்கத்தில் பவானிப்பூர், ஜாங்கிபூர் மற்றும் சாம்செர்காஞ்ச் ஆகிய 3 தொகுதிகளுக்கு வரும் 30-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, நடந்து முடிந்த மேற்குவங்க சட்டப் பேரவைத் தேர்தலில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் மொத்தமுள்ள 294 இடங்களில் 213 தொகுதிகளை பிடித்து மீண்டு ஆட்சியை பிடித்த நிலையில், பாஜக 77 இடங்களுடன் இரண்டாவது பெரிய கட்சியாக உருவெடுத்தது.
சட்டசபை தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட முதல்வர் மம்தா பானர்ஜி சுவேந்து அதிகாரியிடம் தோல்வி அடைந்தார். இருப்பினும், மேற்குவங்க முதல்வராக மம்தா பானர்ஜி பதவியேற்ற நிலையிலும், அவர் 6 மாதங்களுக்குள் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட வேண்டும்.
அதன்படி, செப்டம்பர் 30ம் தேதி நடைபெற உள்ள பவானிப்பூர் இடைத்தேர்தலில் போட்டியிட முடிவு செய்த மம்தா, இன்று வேட்புமனுவும் தாக்கல் செய்துள்ளார். நந்திகிராமம் தொகுதியில் மம்தா வெற்றி பெற்றதாக அறிவித்ததை தொடர்ந்து, சில நேரத்தில் சுவேந்து அதிகாரி வெற்றி என அறிவிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து, தோல்வியில் சந்தேகம் இருப்பதாகக் கூறி மம்தா பானர்ஜி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். தற்போது அந்த வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில்,பவானிப்பூர் இடைத்தேர்தலில் போட்டியிட இருக்கிறார்.
மும்பை : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை அணியும், பெங்களூர் அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற மும்பை அணி…
மும்பை : ஒரு பக்கம் மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ச்சியாக இந்த சீசனில் தோல்விகளை சந்தித்து வருவது ஒரு கவலையான விஷயமாக…
மும்பை : இன்று வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், பெங்களூர் அணியும் மோதுகிறது. இந்த போட்டியில் முதலில்…
சென்னை : செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும் நிகழ்ச்சியில்…
மும்பை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் பெங்களூர் அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் மோதுகிறார்கள். இந்த…
சென்னை : இன்று செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும்…