#BharatJodoYatra: 100வது நாளை எட்டிய இந்திய ஒற்றுமைப் பயணம்!
ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை பயணத்தின் 100-வது நாள் நிகழ்வை இன்று கொண்டாட ஜெய்ப்பூரில் ஏற்பாடு.
மக்களை ஒன்றுபடுத்த காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தொடங்கிய இந்திய ஒற்றுமை பயணம் இன்றுடன் 100வது நாளை எட்டியுள்ளது. இதை ஜெய்ப்பூரில் சிறப்பாக கொண்டாட காங்கிரஸ் கட்சி ஏற்பாடு செய்துள்ளது. 150 நாட்களுக்குள், 12 மாநிலங்களில் 3,500 கி.மீ தூரத்தை கடக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மக்களை ஒன்றுபடுத்துவதற்காக இந்திய ஒற்றுமை பயணத்தைக் கடந்த செப்.7-ம் தேதி கன்னியாகுமரியில் ராகுல்காந்தி தொடங்கினார். இந்த நிலையில், ராகுல் காந்தி தலைமையில் இந்திய காங்கிரஸ் கட்சி துவங்கியிருக்கும் இந்திய ஒற்றுமைப் பயணம் இன்றுடன் 100வது நாளை எட்டியுள்ளது.
ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை பயணத்தின் 100-வது நாள் நிகழ்வு இன்று ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் கோலாகலமாகக் கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நடைபயணம் பிப்ரவரி முதல் வாரத்தில் ஜம்மு காஷ்மீரில் தேசியக் கொடி ஏற்றப்பட்டு நிறைவடைய இருக்கிறது.