காசியில் புதுப்பொலிவு பெரும் மகாகவி பாரதியார் வாழ்ந்த வீடு.! வாரணாசி கலெக்டர் அசத்தல் தகவல்.!

Default Image

காசியில் 4 ஆண்டுகள் மகாகவி பாரதியார் வாழ்ந்த வீட்டை புதுப்பிக்கபட உள்ளது என வாரணாசி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். 

மகாகவி பாரதியார் இந்திய முழுவதும் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வந்துள்ளார். அப்படி அவர் 1898ஆம் ஆண்டு முதல் 1902 ஆண்டு வரையில் உத்திர பிரதேச மாநிலம், வாரணாசி மாவட்டத்தில் காசியில் தனது அத்தை வீட்டில் தங்கி இருந்தார்.

அப்போது தான் ஹிந்தி, சம்ஸ்கிருதம் ஆகிய மொழிகளை கற்று தேர்ந்தார். மேலும், அப்போது வாழ்ந்து வந்த பாலகங்காதர திலகர் , அன்னிபெசன்ட் அம்மையார், மதன் மோகன் மாளவியா ஆகிய ஆளுமைகளை சந்தித்தார் பாரதியார்.

மகாகவி பாரதியார் 4 ஆண்டுகள் தங்கி இருந்த வீட்டில் தற்போது பாரதியாரின் உறவினர் வம்சாவளியினர் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், பாரதியார் வீட்டை பார்வையாளர்கள் பார்க்கும் வண்ணம் புதுப்பிக்க நடவடிக்கை ஈடுபட்டு வருகிறது.

இது குறித்து, வாரணாசி மாவட்ட ஆட்சியர் ராஜலிங்கம் கூறுகையில் , வீட்டில் வசிப்போரின் அனுமதி பெற்று, வீட்டை புதுப்பிக்க முடிவு செய்துள்ளதாக கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்