கடந்த 6 வருடத்தில் 1,621 கோடியே 40 லட்சம் ரூபாய் நன்கொடையாக வாங்கிய பாஜக!
கார்ப்பரேட் நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்ட நன்கொடைகளில் இருந்து 93 சதவீதம் நன்கொடையை தற்போது மத்தியில் ஆளும் பாரத ஜனதா கட்சி பெற்று உள்ளது என ஆய்வில் கூறப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக, Association for Democratic Reforms என்ற அமைப்பு நடத்திய ஆய்வில் 2016-2017 மற்றும் 2017-2018 ஆகிய ஆண்டுகளில் கார்ப்பரேட் நிறுவனத்திடம் இருந்து அரசியல் கட்சிகளுக்கு மொத்தமாக 1,059 கோடி ரூபாய் நன்கொடை கொடுக்கப்பட்டு உள்ளது.
அந்த 1,059 கோடி ரூபாய் நன்கொடையில் மத்தியில் ஆளும் பாரத ஜனதா கட்சிக்கு மட்டும் 915 கோடியே 59 லட்சம் ரூபாயை ஆயிரத்து 731 கார்ப்ரேட் நிறுவனத்திடம் இருந்து நன்கொடையாக வாங்கி உள்ளது.
இதேபோன்று 151 கார்ப்ரேட் நிறுவனத்திடம் இருந்து காங்கிரஸ் கட்சி 55 கோடியே 36 லட்சம் ரூபாய் நன்கொடை நன்கொடையாக வாங்கி உள்ளது. 2014-2015 ஆண்டில் கார்ப்ரேட் நிறுவனத்தின் மூலம் அரசியல் கட்சிகளுக்கு 573 கோடியே 18 லட்சம் ரூபாயும் , 2016-2017 ஆண்டில் 563 கோடியே 19 லட்சம் ரூபாயும், 2017-2018 ஆண்டில் 421 கோடியே 99 லட்சம் ரூபாயும் நன்கொடையாக கொடுக்கப்பட்டது என ஆய்வில் கூறப்பட்டு உள்ளது.
இந்நிலையில் கடந்த ஆறு வருடத்தில் 1,621 கோடியே 40 லட்சம் ரூபாய் மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி நன்கொடையாக பெற்று உள்ளது என ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2012-13 – 72.99
2013-14 -156.983
2014-15 -408.344
2015-16 -67.49
2016-17 -515.4
2017-18 -400.196