குஜராத்தில் மீண்டும் ஆட்சியமைக்கிறது பாரதிய ஜனதா!

Default Image

குஜராத்தில் 7வது முறையாக ஆட்சியை தக்கவைக்கிறது பாஜக. பாஜக தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டம்.

குஜராத் மாநிலத்தில் மொத்தமுள்ள 182 தொகுதிகளில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் விறுவிறுப்பாக எண்ணப்பட்டு இறுதி கட்டத்தை எட்டி வருகிறது. ஆரம்ப முதல் தற்போது வரை குஜராத்தில் பாஜக மாபெரும் வரலாற்று முன்னிலையில் இருந்து வருகிறது. 182 தொகுதிகளை கொண்ட குஜராத்தில் 150க்கும் மேற்பட்ட இடங்களில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது.

இதனால் நாடு முழுவதும் பாஜக தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். காங்கிரஸ் 17 இடங்களில் மட்டுமே முன்னிலையில் உள்ளது. குஜராத் தேர்தல் வரலாற்றில் இந்த முறை பாஜக 150க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை பெற்று புதிய வரலாற்றை படைத்துள்ளது.

குஜராத் சட்டமன்றத் தேர்தலில் பாஜக 8 இடங்களில் வெற்றி பெற்று 150 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது என என்று தலைமை தேர்தல் ஆணையம் இணையத்தில் வெளியிட்டுள்ளது. இதனிடையே, குஜராத் சட்டமன்றத் தேர்தலில் அதிக இடங்களை வென்ற பட்டியலில் காங்கிரஸ் (1985 இல் 149) என்ற சாதனையைப் படைத்துள்ளது.

காங்கிரஸ் 1980ல் 141 இடங்களிலும், 1972ல் 140 இடங்களிலும் வென்றது. 2002 குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 127 இடங்களில் வெற்றி பெற்றது. இந்த நிலையில் தற்போது 2022ல் பாஜக 150க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை பெற்று ஒரு வரலாற்றை படைக்கவுள்ளது. எனவே, குஜராத்தில் 7வது முறையாக மீண்டும் ஆட்சியமைக்கிறது பாரதிய ஜனதா கட்சி.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்