பாரத் மாதா கீ ஜே என கூறினால் இந்தியாவில் வசிக்கலாம்… மத்திய அமைச்சர் அதிரடி கருத்து..
- பாரத் மாதா கீ ஜே என கூற முடியாதவர்கள் இந்தியாவில் வசிக்க முடியாது.
- எனவே பாரத் மாதா கீ ஜே என்று கூறுபவர்கள் மட்டுமே இந்தியாவில் இருக்க முடியும்.
பாராளுமன்றத்தில்,குடியுரிமை திருத்தச் சட்டத்தை கண்டித்து நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.இதிலும் குறிப்பாக உத்தரப்பிரதேசம் மாநிலம் உள்ளிட்ட மாநிலங்களில் போராட்டம் கலவரமாக மாறியது. இந்நிலையில் ஆர் எஸ் எஸ்ஸின் மாணவர் அமைப்பு சார்பில் நடந்த விழாவில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கலந்து கொண்டார். இதுகுறித்து அவர் பேசும் போது, இந்திய விடுதலைக்காக போராடிய பகத்சிங்கும் சுபாஷ் சந்திர போஸும் இந்திய நாட்டிற்காக பெரும் தியாகம் செய்துள்ளனர். நம் நாட்டில் யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் சாதாரணமாக வலம் வரும் வகையில் நம் நாட்டை பொது சத்திரமாக மாற்ற வேண்டுமா? என்று தெரிவித்தார். மேலும் இவர், பாரத் மாதா கீ ஜே என சொல்ல தயாராக இருப்போர் மட்டுமே இந்தியாவில் வாழலாம் என தெரிவித்துள்ளார். போராட்டத்தின் போது பாகிஸ்தான் ஜிந்தபாத் என்று கூறியவர்களின் போராட்டத்தை கட்டுப்படுத்திய காவல்துறை அதிகாரி ஒருவர் விருப்பம் இல்லையென்றால் பாகிஸ்தானுக்கு செல்லுங்கள் என முஸ்லீம்களை பார்த்து கூறியதை மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி கண்டித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.