இன்று அறிமுகப்படுத்தப்படும் “பாரத் அரிசி” திட்டம்..!

Bharat Rice

கடந்த ஓராண்டில் அரிசியின் சில்லறை மற்றும் மொத்த விற்பனை விலை சுமார் 15 சதவீதம் அதிகரித்துள்ளது. ஏற்றுமதிக்கு தடை இருந்தும், விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. எனவே விலையை கட்டுப்படுத்தும் வகையில் “பாரத் அரிசி”-யை சந்தையில் அறிமுகப்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.

அதன்படி “பாரத் அரிசி” என்ற பெயரில்  ரூ.29 -க்கு மானிய விலையில் ஒரு கிலோ அரிசி யை மத்திய அரசு இன்று (செவ்வாய்க்கிழமை) அறிமுகப்படுத்தவுள்ளது. மானிய விலையில் வழங்கப்படும் இந்த அரிசி 5 கிலோ மற்றும் 10 கிலோ மூட்டைகளில் கிடைக்கும். இந்த “பாரத் அரிசி” உணவுத் துறை அமைச்சர் பியூஷ் கோயல், இன்று டெல்லியில் அறிமுகப்படுத்த உள்ளார்.

லக்னோ சிறையில் எச்.ஐ.வி தொற்றால் பாதிக்கப்பட்ட கைதிகள் எண்ணிக்கை 63 ஆக உயர்வு

முதற்கட்டமாக 5 லட்சம் டன் அரிசியை சில்லறை சந்தையில் விற்பனை செய்ய அரசு ஏற்பாடு செய்துள்ளது. இந்திய உணவுக் கழகம் (FCI) இந்திய தேசிய வேளாண்மை கூட்டுறவு சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு (NAFED) மற்றும் இந்திய தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு (NCCF)  கேந்திரிய பந்தர் விற்பனை நிலையங்கள் மற்றும் நடமாடும் வேன்கள் மூலமாக இது விற்பனை செய்யப்பட உள்ளது.

மத்திய அரசு  ஏற்கனவே பாரத் ஆட்டா மற்றும் பாரத் தால் ஆகியவற்றை சந்தையில் அறிமுகப்படுத்தியது.  தற்போது “பாரத் ஆட்டா” என்ற பெயரில் கோதுமை மாவு கிலோ ரூ.27.50க்கும், “பாரத் தால்” என்ற பெயரில் வெள்ளை கொண்டைக் கடலை கிலோ ரூ.60-க்கும் மானிய விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

நாடு முழுவதும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விற்பனை நிலையங்களில் விற்பனை செய்யப்படுகிறது. பாரத் ஆட்டா, பாரத் தால் போல பாரத் அரிசியை விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்