Bharat Ratna Award to Karpoori Thakur [file image]
சுதந்திர போராட்ட வீரரும், பீகார் மாநில முன்னாள் முதலமைச்சருமான கர்பூரி தாக்கூருக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மிகவும் பின்தங்கிய சமூகப் பிரிவில் பிறந்த கர்பூரி தாக்கூர், ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்று சிறைவாசம் சென்றவர்.
பிரஜா சோசலிஸ்ட் கட்சியுடன் தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கிய கர்பூரி தாக்கூர், 1977 – 1979 காலகட்டத்தில் பீகார் மாநில முதலமைச்சராக பதவி வகித்தபோது ஜனதா கட்சியில் ஐக்கியமானார். அரசு பணி, கல்வியில் பிற்படுத்தப்பட்டோர், பட்டியலினத்திற்கு இடஒதுக்கீடு கோரி செயல்பட்டவர். பீகார் மாநில முதல்வராக இருந்தபோது பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு கல்வியில் 12% இடஒதுக்கீடு கொண்டுவந்தவர்.
எனவே, பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து மக்கள் மத்தியில் செல்வாக்கு மிகுந்த தலைவராக திகழ்ந்த கர்பூரி தாக்கூர் பிப்ரவரி 17, 1988ல் காலமானார். இதனால், கர்பூரி தாக்கூருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று நீண்ட காலமாக பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வந்தனர்.
மத்திய பட்ஜெட் 2024: எந்தெந்த துறைக்கு கூடுதல் நிதி? புதிய சலுகைகள் கிடைக்குமா?
இந்த நிலையில், கர்பூரி தாக்கூருக்கு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கப்படும் என குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அறிவித்தார். கர்பூரி தாக்கூர் இறந்து 35 ஆண்டுகளுக்குப் பிறகு பாரத ரத்னம் விருது வழங்கப்படுகிறது. அதுமட்டுமில்லாமல், அவரது 100வது பிறந்த நாளை முன்னிட்டு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பிரதமர் மோடி எக்ஸ் தள பதிவில், சமூக நீதியின் கலங்கரை விளக்கமான கர்பூரி தாக்கூருக்கு பாரத ரத்னா விருதை வழங்க இந்திய அரசு முடிவு செய்திருப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். அதுவும் அவரது பிறந்த நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் நேரத்தில் அறிவிக்கப்பட்டிருப்பது பெரும் மகிழ்ச்சி. இந்த அங்கீகாரம், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சமத்துவம் மற்றும் அதிகாரமளிப்பதில் உறுதியானவராக இருந்த அவரது முயற்சிகளுக்கு கிடைத்த சான்றாகும் என்று பிரதமர் பாராட்டியுள்ளார்.
சென்னை : சேலம் மாவட்ட சரித்திர பதிவேடு குற்றவாளி ரவுடி ஜான் எனும் சாணக்யாவை மர்ம கும்பல் ஒன்று இன்று அவரது…
சென்னை : சூர்யா ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் தனியாக ஒரு படத்தில் நடிக்க எந்த அளவுக்கு எதிர்பார்ப்பு இருக்கிறதோ அதே அளவுக்கு அவர்…
மேற்கு வங்கம் : ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு ஆய்வு பணிகளுக்காக இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க விண்வெளி…
பஞ்சாப் : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் வரும் மார்ச் 22-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ள நிலையில், போட்டியில் விளையாடும் அணிகள்…
டெல்லி : இந்த வருட ஐபிஎல் (IPL 2025) திருவிழா வரும் மார்ச் 22ஆம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன்…
சென்னை : டாஸ்மாக் டெண்டர்களில் சுமார் ரூ.1000 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறப்பட்ட நிலையில் அதற்கு பொறுப்பேற்று அமைச்சர் செந்தில் பாலாஜி…