ஒரே நாளில் 3 பேருக்கு பாரத ரத்னா விருது – பிரதமர் மோடி அறிவிப்பு

Bharat Ratna award

ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் குடிமக்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதுதான் பாரத ரத்னா. அதன்படி, ஜனவரி 2,1954 முதல் அரசியல், கலை, இலக்கியம் மற்றும் அறிவியல் உள்ளிட்ட துறைகளில் சிறப்பாக செயல்பட்டு சாதனை புரிந்தவர்களுக்கு பாரத ரத்னா வழங்கப்படுகிறது. அந்தவகையில், நாட்டிலேயே மிக உயர்ந்த விருதாக மதிக்கப்படும் பாரத ரத்னா விருது, பீஹார் முன்னாள் முதல்வர் கர்ப்பூரி தாக்கூர் மற்றும் பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானிக்கு வழங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், இன்று மூன்று பேருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படும் என்று பிரதமர் மோடி தனது ‘எக்ஸ்’ வலைதளப் பக்கத்தில் அறிவித்துள்ளார். அதில், முன்னாள் பிரதமர் பி.வி நரசிம்ம ராவ், தமிழ்நாட்டைச் சேர்ந்த மூத்த வேளாண் விஞ்ஞானி டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன், முன்னாள் பிரதமர் சரண் சிங் ஆகியோருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படுகிறது. கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் 5 பாரத ரத்னா விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி வெளியிட்ட பதிவுகள்:

டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன்: விவசாயம் மற்றும் விவசாயிகள் நலனில் அவர் ஆற்றிய மகத்தான பங்களிப்பைப் போற்றும் வகையில், இந்திய அரசு அவருக்கு பாரத ரத்னா விருது வழங்குவது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. சவாலான காலங்களில் இந்தியா விவசாயத்தில் தன்னிறைவை அடைய உதவுவதில் அவர் முக்கிய பங்கு வகித்தார். இந்திய விவசாயத்தை நவீனமயமாக்குவதில் சிறந்த முயற்சிகளை மேற்கொண்டார். மாணவர்களிடையே கற்றல் மற்றும் ஆராய்ச்சியை ஊக்குவிக்கும் அவரது விலைமதிப்பற்ற பணியை நாங்கள் அங்கீகரிக்கிறோம்.

புதுச்சேரியில் பஞ்சு மிட்டாய் விற்க தடை!

பி.வி.நரசிம்ம ராவ்: பி.வி.நரசிம்ம ராவ் அவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படும் என்பதை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். ஒரு சிறந்த அறிஞராகவும், அரசியல்வாதியாகவும், நரசிம்ம ராவ் பல்வேறு பதவிகளில் பணிபுரிந்தார். இந்தியா பொருளாதார ரீதியாக முன்னேற நரசிம்மராவின் தொலைநோக்கு பார்வை உதவியது. வெளியுறவு கொள்கை உள்ளிட்டவற்றில் நரசிம்மராவ் ஆற்றிய பங்களிப்புகள் நாட்டை வழிநடத்தியது.

சரண் சிங்: நாட்டின் முன்னாள் பிரதமர் சரண் சிங்குக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படுவது நமது அரசின் அதிர்ஷ்டம். நாட்டிற்கு அவர் ஆற்றிய ஒப்பற்ற பங்களிப்பிற்காக இந்த மரியாதை அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. அவர் தனது வாழ்நாள் முழுவதையும் விவசாயிகளின் உரிமைகளுக்காகவும் அவர்களின் நலனுக்காகவும் அர்ப்பணித்தவர்.

எந்த பதவியில் இருந்தாலும் தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கு அவர் எப்போதும் உத்வேகம் அளித்தார். எமர்ஜென்சிக்கு எதிராகவும் உறுதியாக நின்றார். நெருக்கடி நிலையின் போது ஜனநாயகத்தின் மீதான அவரது அர்ப்பணிப்பும் ஒட்டுமொத்த தேசத்திற்கும் ஊக்கமளிப்பதாக உள்ளது என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்