பாரத் பெட்ரோலியம், ஏர் இந்தியா நிறுவன பங்குகள் விற்பனை.. நிதியமைச்சர் அறிவிப்பு..!
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2021-22 மத்திய பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தார். “மேட் இன் இந்தியா” டேப்லெட் கணினியைப் பயன்படுத்தி சீதாராமன் 2021 பட்ஜெட்டை தாக்கல் செய்தார். மத்திய பட்ஜெட் தற்போதைய சூழலில் மிகவும் முக்கியமானது, ஏனெனில் இது கோரோனா தொற்றுநோய்க்கு மத்தியில் தாக்கல் செய்யப்படுவதால் மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.
இன்று பட்ஜெட் உரையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், சுகாதாரத்துறை , ரயில்வே உள்ளிட்டவற்றிற்கு நிதி ஒத்துக்கப்பட்ட பொதுத்துறை நிறுவன பங்குகள் விற்பனை குறித்து அறிவிக்கப்பட்டது.
அதன்படி, ஏர் இந்தியா, பாரத் பெட்ரோலியம், 2 பொதுத்துறை வங்கி உள்ளிட்ட மத்திய அரசிடம் உள்ள பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை வரும் நிதியாண்டில் விற்க முடிவு செய்யப்பட்டுள்ளது என மத்திய அமைச்சர் தெரிவித்தார். இவற்றை விற்பதன் மூலம் அடுத்த ஒரே ஆண்டில் ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாயை ஈட்ட திட்டம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், காப்பீட்டு நிறுவனங்களில் அந்நிய முதலீடு சதவீதம் 49-லிருந்து 74 சதவீதமாக உயர்த்த பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு முடிவு செய்துள்ளதாகவும் மத்திய அமைச்சர் அறிவித்தார்.