பாஜக, RSSக்கு எதிராக இந்தியா கூட்டணி ஒன்றிணைந்து போராடும்.! ராகுல் காந்தி பேச்சு.!

Published by
மணிகண்டன்

பாரத ஒற்றுமை யாத்திரையை தொடர்ந்து, காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி தற்போது பாரத ஒற்றுமை நியாய யாத்திரையை (Bharat Jodo Nyay Yatra) மணிப்பூரில் இருந்து கிழக்கு முதல் மேற்காக தொடங்கியுள்ளார் . இந்த ஒற்றுமை நியாய யாத்திரை கடந்த மாதம் 14ஆம் தேதி தொடங்கபட்டது. அசாம் மாநிலத்தில் கோலகஞ்சி, துப்ரி ஆகிய மாவட்டங்களை கடந்து தற்போது மேற்கு வங்கத்தில் யாத்திரை தொடங்கியுள்ளது.

இன்னும் 25 வழக்குகள் கூட போடுங்கள்… நான் பயப்பட மாட்டேன்.! – ராகுல்காந்தி.

இன்று மேற்கு வங்கம் நுழைந்த  ராகுல்காந்தியை அம்மாநில காங்கிரஸ் தலைவர் ஆதிர் சவுத்ரி வரவேற்றார்.  அதன் பின்னர் மக்கள் மத்தியில் ராகுல் காந்தி பேசுகையில், இந்த முறை ஒற்றுமை யாத்திரைக்கு ஏன் நியாய யாத்திரை என்று பெயர் வைத்தோம் என்று தெரியுமா.? பாஜக, RSS சக்திகளுக்கு எதிராக போராட வேண்டும்  என்பதற்காக மட்டுமே நியாய யாத்திரை என பெயர் வைத்துள்ளோம் என்று கூறினார் .

மேலும், பாஜக, ஆர்எஸ்எஸ் சக்திகளுக்கு எதிராக இந்தியா கூட்டணி (I.N.D.I.A ) ஒன்றிணைந்து செயல்படும் என ராகுல் காந்தி கூறினார். முன்னதாக நேற்று மம்தா பேனர்ஜி அரசியல் கூட்டத்தில் பேசுகையில், நாங்கள் இந்தியா கூட்டணியில் இருக்கிறோம் ஆனால், மேற்கு வங்கத்தில் தனித்து தான் போட்டியிட உள்ளோம் என அறிவித்தார்.

இதனை அடுத்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், கூட்டணிக்குள் கருத்து வேறுபாடு சகஜம் தான். அதனை நாங்கள் பேசி தீர்த்துவிடுவோம் என மேற்கு வங்க தொகுதி பங்கீடு குறித்து விளக்கம் அளித்தார்.

 

Recent Posts

மீண்டும் வாய்ப்பு கிடைத்தால் விண்வெளி செல்வீர்களா? சுனிதா வில்லியம்ஸ் சொன்ன பதில்!

ஃபுளோரிடா : கடந்த 2024 ஜூலை மாதம், ஒரு வார கால ஆராய்ச்சிப் பணிக்காக சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS)…

7 minutes ago

அதுக்கு ஓவர் கொடுக்கவில்லை? அஸ்வினி குமாருக்காக ஹர்திக் பாண்டியாவை வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்!

மும்பை :  ஐபிஎல் 2025 சீசனில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணிகளுக்கு இடையே மார்ச்…

49 minutes ago

குறைந்தது வர்த்தக கேஸ் சிலிண்டர் விலை! மகிழ்ச்சியில் வணிகர்கள்!

சென்னை : இந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையை எண்ணெய் நிறுவனங்களான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (IOC), ஹிந்துஸ்தான் பெட்ரோலியம்…

1 hour ago

மும்பைக்கு கிடைத்த புது ஹீரோ! யார் இந்த ‘ஆட்ட நாயகன்’ அஸ்வினி குமார்?

மும்பை :  எப்போதுமே திறமையான இளம் வீரர்களை எடுத்து அவர்களுக்கு வாய்ப்பு கொடுத்து அவர்களும் வளர்வதற்கு ஒரு காரணத்தை மும்பை…

2 hours ago

MI vs KKR : சொந்த மண்ணில் கெத்தாக முதல் வெற்றியை ருசித்த மும்பை! கொல்கத்தா படுதோல்வி!

மும்பை : ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் விளையாடின. டாஸ்…

9 hours ago

MI vs KKR : சொந்த மண்ணில் கொல்கத்தாவை ‘ஆல் அவுட்’ செய்த மும்பை.! 117 தான் டார்கெட்!

மும்பை : ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் விளையாடி வருகின்றன.…

11 hours ago