ஒற்றுமை யாத்திரையில் பதற்றம்.? ராகுல் காந்தி கார் மீது கல்வீசி தாக்குதல்.!

Congress Rahul Gandhi - Bharat Jodo Nyay Yatra

பாரத ஒற்றுமை யாத்திரையின் அடுத்த கட்டமாக, பாரத ஒற்றுமை நியாய யாத்திரையை காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி மணிப்பூரில் தொடங்கினார். இந்த யாத்திரை மேற்கு வங்கத்தை தொடர்ந்து தற்போது பீகார் மாநிலத்தில் நடைபெற்று வருகிறது.

இந்தியா கூட்டணியில் இருந்து ஏன் விலகினேன்.? நிதிஷ்குமார் விளக்கம்

இன்று பீகார் மற்றும் மேற்கு வங்க எல்லை பகுதியில் ராகுல்காந்தி ஒற்றுமை யாத்திரையினை தொடங்கிய போது சில மர்ம நபர்கள் ராகுல் காந்தியின் கார் மீது தாக்குதல் நடத்தினர். கற்களை கொண்டு வீசியதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் மேற்கு வங்க மாநிலம் மால்டா மாவட்டத்தில் நடைபெற்றதாக கூறப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக ராகுல் காந்திக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. இதனை மேற்கு வங்க மாநில காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறியதாக தனியார் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த சம்பவத்தில் ராகுல் காந்தி காரின் பின்பக்க கண்ணாடி நொறுங்கியது.

மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி இந்தியா கூட்டணியில் இருந்தாலும் மாநிலத்தில் தனித்து போட்டி என்று மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். பீகார் மாநிலத்தில் இந்தியா கூட்டணியில் இருந்த முதல்வர் நிதிஷ்குமார் வெளியேறி தற்போது பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளார் என்பதும் குறிப்பிட தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்