பாரத் பயோடெக்கின் கொரோனா தடுப்பூசியான கோவாக்ஸின் வரும் ஜூன் மாதம் முதல் குழந்தைகளுக்கு வழங்கி பரிசோதிக்கும் திட்டம் தொடங்கப்பட உள்ளதாக நிறுவனத்தின் வணிக மேம்பாடு தலைவர் டாக்டர் ரேச்ஸ் எலா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா 2வது அலை குழந்தைகளையும் அதிகம் பாதிப்பதாக கூறப்படுவதால், அவர்களுக்கு விரைவாக தடுப்பூசி செலுத்த வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன.
18 வயதுள்ள குழந்தைகளுக்கு கோவாக்சின் தடுப்பூசியின் பரிசோதனைகளை மேற்கொள்ள மருந்து கட்டுப்பாடு அமைப்பு அண்மையில் அனுமதி வழங்கியது.
இதுபற்றி ஹைதராபாத்தில் உள்ள FICCI அமைப்பு உறுப்பினர்களுடன் காணொளி நடைபெற்ற உரையாடலில் பாரத் பயோடெக்கின் வணிக மேம்பாடு தலைவர் ரேச்ஸ் எலா கூறினார்.
இதனையடுத்து ,ஜூன் மாதம் முதல் குழந்தைகளுக்கு கோவாக்ஸின் வழங்கி பரிசோதிக்கும் திட்டம் தொடங்கப்பட உள்ளதாக நிறுவனத்தின் வணிக மேம்பாடு தலைவர் டாக்டர் ரேச்ஸ் எலா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளார்.
நாங்கள் கடந்த ஆண்டு தயாரிப்பை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தினோம். இப்போது எங்கள் கவனம் எங்கள் உற்பத்தி திறனை அதிகரிப்பதில் உள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் எங்கள் உற்பத்தி திறனை 700 மில்லியன் அளவுகளாக உயர்த்துவோம் என்று கூறினார்.
மூன்றாவது அல்லது நான்காவது காலாண்டின் இறுதிக்குள் கோவாக்சினுக்கான உலக சுகாதார அமைப்பின் (WHO) ஒப்புதலைப் பெற பாரத் பயோடெக் எதிர்பார்க்கிறது என்றார்.
சென்னை : இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெரிய நடிகர்களுடைய படங்கள் வெளியாகவில்லை என்றாலும், தீபாவளியைத் தரமாகவும் குடும்பத்துடனும்…
பஞ்சாப் : ஆஸ்திரேலியா அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் கிளன் மேக்ஸ்வெல் நடந்து முடிந்த 2017 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு…
சென்னை : நாளை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு என்ன படம் பார்க்கலாம் என்று தேடிக்கொண்டு இருப்பவர்களுக்கு ஒரு விருந்தாக ரப்பர்…
சென்னை : இன்று முத்துராமலிங்க தேவரின் 117-வது ஜெயந்தியை முன்னிட்டு, அரசியல் தலைவர்கள் பலரும் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர்…
சென்னை : மிகவும் எதிர்பார்க்கப்பட்டநயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியரின் திருமண ஆவணப்படமான ஆவணப்படமான "நயன்தாரா - பியோண்ட் தி…
அயோத்தி : தீபாவளியை முன்னிட்டு பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் செய்த காரியம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அயோத்தி ராமர்…