16.5 லட்சம் கோவாக்சின் தடுப்பூசிகளை இலவசமாக வழங்க பாரத் பயோடெக் நிறுவனம் முடிவு – மத்திய அரசு தகவல்

16.5 லட்சம் கோவாக்சின் தடுப்பூசிகளை இலவசமாக வழங்க பாரத் பயோடெக் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகளை அவசர காலத்துக்கு பயன்படுத்த இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் ஒப்புதல் அளித்ததை அடுத்து, நாடு முழுவதும் வரும் 16-ஆம் தேதி முதல் கொரோனா வைரசுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது.
இந்நிலையில் 16.5 லட்சம் கோவாக்சின் தடுப்பூசிகளை இலவசமாக வழங்க பாரத் பயோடெக் நிறுவனம் முன்வந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும் 38.5 லட்சம் தடுப்பூசிகளை தலா ரூ.295க்கு கொள்முதல் செய்ய மத்திய அரசு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
GetOut கையெழுத்திட அழைத்த ஆதவ்., மறுத்த பிரசாந்த் கிஷோர்!
February 26, 2025