ராஜஸ்தான் முதல்வராக பஜன்லால் சர்மா பதவியேற்பு..!

Published by
லீனா

கடந்த மாதம் 5 மாநில தேர்தல்  நடந்து முடிந்த நிலையில், இம்மாதம் 3-ஆம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டது. ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களிலும் பாஜக ஆட்சியை கைப்பற்றியது. தெலுங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியும், மிசோராம் மாநிலத்தில் சோரம் மக்கள் இயக்கமும் ஆட்சியை பிடித்தன.

அதன் பிறகு சில நாட்கள் 3 மாநில முதல்வர்கள் யார் என அறிவிக்காமல் இருந்து வந்தது. இதனை தொடர்ந்து 3 மாநிலத்திற்கும் முதலமைச்சர் தேர்வு குறித்து மேலிட பொறுப்பாளர் குழுவை பாஜக தலைமை நிர்ணயித்தது.

நாடாளுமன்ற அத்துமீறல்.. முக்கிய ஆதாரங்களை எரித்த லலித்.? தீவிரமடையும் விசாரணை.!

சத்தீஸ்கர் மாநிலத்தின் முதலமைச்சராக பழங்குடியினத்தை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சரும், முன்னாள் பாஜக மாநில தலைவருமான விஷ்ணு தியோ சாய் தேர்வு செய்யப்பட்டார். மத்தியப் பிரதேச மாநிலத்தின் புதிய முதலமைச்சராக மோகன் யாதவ் தேர்வு செய்யப்பட்டார்.

இதனை தொடர்ந்து ராஜஸ்தான் முதல்வராக பஜன்லால் சர்மா தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், இன்று  ராஜஸ்தான் முதல்வராக பஜன்லால் சர்மா பதவியேற்றார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா ஆகியோ கலந்து கொண்டனர்.

Recent Posts

இந்தா வந்துட்டேன் ராசா! மும்பை ரசிகர்களுக்கு குட் நியூஸ்..பும்ரா குறித்த புது அப்டேட்!

பெங்களூர் : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் தொடங்கி விறு விறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணி ஒரு…

56 minutes ago

டயலாக் பேசாமலே மிரட்டும் எஸ்.ஜே. சூர்யா.., பட்டையை கிளப்பும் ‘சர்தார் 2’ டீசர்.!

சென்னை : கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள "சர்தார் 2" தமிழ் திரையுலகில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிள்ளது. இது 2022 ஆம்…

57 minutes ago

பெண்ணிடம் இப்படியா நடப்பது? சர்ச்சையில் பீகார் முதல்வர் நிதிஷ் குமார்.!

பீகார் : பீகாரில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சி ஒன்றில்,பெண் ஒருவரிடம் முதல்வர் நிதிஷ்குமார் நடந்து கொண்ட விதம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.…

2 hours ago

விஜய் தம்பி ஜி இப்படி பேசாதீங்க! தமிழிசை சௌந்தரராஜன் பதிலடி!

சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டத்தில் அக்கட்சி தலைவர் விஜய் திமுக மற்றும் பாஜக குறித்து…

2 hours ago

கடந்த 5 வருஷமா இப்படி தான்..லேட்டாவா இறங்குவீங்க? தோனியை விமர்சித்த சேவாக்!

சென்னை : ஐபிஎல் தொடரில் விளையாடும் சென்னை அணிக்கு என்னதான் ஆச்சு என்கிற வகையில் சொதப்பலான ஆட்டத்தை நடப்பாண்டு வெளிப்படுத்தி வருகிறது.…

2 hours ago

“ஈரான் மீது குண்டு வீசுவோம்” – ஈரானுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பகிரங்க மிரட்டல்.!

ஈரான் : அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஈரான் மீது குண்டு வீசுவோம் என்று எச்சரிக்கை விடுத்திருப்பது சர்வதேச அரசியலில்…

2 hours ago