#BREAKING: நாளை பகவந்த் மான் ஆளுநரை சந்திக்கிறார்..!

Default Image

பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ள நிலையில் புதிய அரசின் பதவியேற்பு விழா ஆளுநா் மாளிகைக்குப் பதிலாக சுதந்திரப் போராட்டத் தியாகி பகத் சிங் பிறந்த ஊரான கத்கா் கலன் கிராமத்தில் நடைபெறும் என ஆம் ஆத்மி கட்சியின் மாநிலத் தலைவரும், முதல்வா் வேட்பாளருமான பகவந்த் மான் கூறியுள்ளார்.

இதற்கிடையில், இன்று ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜிர்வாலை சந்திக்க உள்ளதாக பகவந்த் மான்  தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பின் போது ஆம் ஆத்மி அமைச்சரவையில் எத்தனை பேர் இடம்பெறவேண்டும். யார் எல்லாம் இடம்பெற வேண்டும் என்பது குறித்து ஆலோசனை நடத்த உள்ளார்.

இந்நிலையில், பஞ்சாபில் ஆட்சியமைக்க நாளை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை  சந்தித்து ஆம் ஆத்மி பகவந்த் மான் உரிமை கோருகிறார்.  ஆம் ஆத்மி கட்சி சார்பில் 92 சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

 

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்