உபி,பஞ்சாப்,கோவா,மணிப்பூர் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களுக்கு அண்மையில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில்,நேற்று முன்தினம் ஆக்கு எண்ணிக்கை நடைபெற்றது.இதில்,பஞ்சாப் தவிர நான்கு இடங்களில் பாஜக பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
அதே சமயம்,பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ள நிலையில் புதிய அரசின் பதவியேற்பு விழா மார்ச் 16-ஆம் தேதி நடைபெறுகிறது.ஆளுநா் மாளிகைக்குப் பதிலாக சுதந்திரப் போராட்டத் தியாகி பகத் சிங் பிறந்த ஊரான கத்கா் கலன் கிராமத்தில் நடைபெறும் என பஞ்சாப் மாநில ஆம் ஆத்மி கட்சியின் மாநிலத் தலைவரும்,முதல்வா் வேட்பாளருமான பகவந்த் மான் கூறியிருந்தார்.
இந்நிலையில்,பஞ்சாபில் ஆட்சியமைக்க இன்று ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்து ஆட்சி அமைப்பது குறித்து ஆம் ஆத்மி பகவந்த் மான் உரிமை கோருகிறார். ஆம் ஆத்மி கட்சி சார்பில் 92 சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.டெல்லியை தாண்டி முதல் முறையாக ஆம் ஆத்மி பஞ்சாப்பில் ஆட்சி அமைக்க உள்ளது.
இலங்கை : பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு சென்று இருக்கும் நிலையில், இலங்கை அதிபர் அநுர குமார திசநாயக முன்னிலையில்…
லக்னோ : ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்காக விளையாடி வரும் திக்வேஷ் ரதி தான் வாங்கும் சம்பளத்தை விட அதிகமாக…
டெல்லி : கடந்த 2019-ஆம் ஆண்டு இயக்குநர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஹிருத்திக் ரோஷன் மற்றும் டைகர் ஷ்ராஃப் நடிப்பில் வெளியாகி…
சென்னை : தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 2024-25 நிதியாண்டில் 9.69% என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது, இது மாநிலத்தின் வரலாற்றில்…
லக்னோ : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை…
வாஷிங்டன் : ஏப்ரல் 4, 2025 அன்று, சீனா அமெரிக்க பொருட்களுக்கு 34% கூடுதல் சுங்கவரியை அறிவித்து, ட்ரம்பின் சுங்கவரி…