கேரளாவின் வயதான மாணவியான பாகீரதி அம்மா அவரது 107 வயதில் இன்று காலமானார்..!
கேரளாவில் உள்ள வயதான மாணவியான பாகீரதி அம்மா அவரின் 107 வயதில் இன்று காலமாகியுள்ளார்.
பாகீரதி அம்மா கேரள மாநிலம் கொல்லம் பகுதியில் உள்ள பிரகுலத்தை சேர்ந்தவர்.இவருக்கு தற்போது வயது 107. இருந்தபோதிலும் இவரின் கல்வி ஆர்வத்திற்கு அளவில்லை. இவரின் முயற்சியால் நான்காம் வகுப்பிற்கு சமமான தேர்வில் வெற்றி பெற்றார். இந்த வெற்றிக்கு பிரதமர் நரேந்திர மோடியும் பாராட்டுகளை மன்கிபாத் நிகழ்ச்சியில் தெரிவித்திருந்தார்.
இவரது படிப்பிற்கு உறுதுணையாக இவரின் இளைய மகள் தங்க மணியும், திருக்கருவ பஞ்சாயத்தை சேர்ந்தவர்களும் உறுதுணையாக இருந்துள்ளனர். மேலும், பாகீரதி அம்மாவின் தோழியான ஷெர்லின் என்பவர் இவருக்கு கல்வியை கற்றுக்கொடுத்து உதவி வந்துள்ளார். அண்டை வீட்டில் வசிக்கும் சாரதா என்பவரும் இவருக்கு கற்பித்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த சில மாதங்களாக இவரது உடல்நிலையில் சரியில்லாமல் இருந்துள்ளது.
பாகீரதி அம்மாவுக்கு ஏழாம் வகுப்பிற்கு சமமான தேர்வில் வெற்றி பெற்று 10 வகுப்பு தேர்வு எழுத வேண்டும் என்பது கனவாக இருந்துள்ளது. மேலும், நடிகர் சுரேஷ் கோபியுடன் நேரில் பேசவும் விரும்பியுள்ளார். இந்நிலையில் இவரது இரண்டு ஆசைகளும் நிறைவேறாத வண்ணம் உடல்நலக்குறைவால் இன்று மறைந்துள்ளார்.