சுதந்திர போராட்ட வீரர் பகத் சிங்கின் மருமகன் அபய் சிங் கொரோனாவால் உயிரிழப்பு..!

Published by
Edison

சுதந்திர போராட்ட வீரர் பகத் சிங்கின் மருமகன் அபய் சிங் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு நேற்று உயிரிழந்துள்ளார்.

சமூக ஆர்வலரும் மறைந்த சுதந்திர போராட்ட வீரருமான ஷாஹீத் பகத் சிங்கின் மருமகன் அபய் சிங் சந்து,சில நாட்களுக்கு முன்பு கொரோனா வைரஸ் அறிகுறிகள் காரணமாக மொஹாலியில் உள்ள ஃபோர்டிஸ் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அங்கு அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து,அபய் சிங்கிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில்,சிகிச்சை பலனளிக்காத காரணத்தினால் வெள்ளிக்கிழமை (மே 14) மாலை அபய் சிங் சந்தூ காலமானார்.

இதனையடுத்து,அபய் சிங் சந்துவின் மரணத்திற்கு பஞ்சாப் மாநில முதல்வர் அமரீந்தர் சிங்,மற்றும் காங்கிரஸ் கட்சியினர் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து,அபய் சிங் சந்துவின் மறைவு குறித்து பஞ்சாப் முதலமைச்சர் அமரீந்தர் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது, “நீண்ட காலமாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இறந்த ஷாஹீத்-இ-அஸாம் பகத் சிங் ஜியின் மருமகன் அபய் சிங் சந்து ஜியின் மறைவு குறித்து அறிந்து வருத்தப்படுகிறேன்.அவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கல். அபய் சிங் சந்து ஜியின் சிகிச்சைக்கான முழு செலவை நாங்களே ஏற்றுக்கொள்கிறோம்.வாகேகுரு அவருக்கு நித்திய அமைதியை வழங்கட்டும்”,என்று கூறினார்.

கொரோனா தொற்று காரணமாக இறந்த அபய் சிங் சந்தூ,மறைந்த சுதந்திர போராட்ட வீரர் பகத்சிங்கின் தம்பியான சர்தார் குல்பீர் சிங்கின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
Edison

Recent Posts

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்தது.!

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்தது.!

சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்துள்ளது. நேற்று ரூ.60,440க்கு விற்கப்பட்ட ஒரு சவரன் தங்கம்,…

5 minutes ago

வயநாடை அச்சுறுத்திய ஆட்கொல்லி புலி சடலமாக கண்டெடுப்பு!

கேரளா : வயநாடு மானந்தவாடி பஞ்சரகோலியில் ராதா என்ற பெண் தேயிலை தோட்டத்தில் வேலை செய்துகொண்டிருக்கும் பொழுது, எதிர்பாராம அங்கு வந்த…

46 minutes ago

இளையராஜாவை பற்றி பேச அருகதை கிடையாது! மிஷ்கினை வெளுத்து வாங்கிய விஷால்!

சென்னை : பாட்டில் ராதா என்கிற படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்து…

1 hour ago

Live : ஆளுநரின் தேநீர் விருந்து புறக்கணித்த கட்சிகள் முதல்..தமிழக அரசியல் நகர்வுகள் வரை!

சென்னை : 76-வது குடியரசு தினத்தை ஒட்டி சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்தில் அதிமுக, பாஜக, தேமுதிக…

2 hours ago

இதயமாற்று அறுவை சிகிச்சை துறையின் ‘BIG DADDY’! யார் இந்த மருத்துவர் கே.எம்.செரியன்?

சென்னை : மருத்துவர் செரியன் (Dr. Cherian) காலமானார் என்ற செய்தி தமிழ்நாட்டில் மற்றும் மருத்துவ சமுதாயத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.…

2 hours ago

INDvENG : தொடரை கைப்பற்றுமா இந்திய அணி? 3-வது போட்டியில் எதிர்பார்க்கப்படும் வீரர்கள்!

குஜராத் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 டி20 போட்டிகள் மூன்று ஒரு நாள் போட்டிகள்…

3 hours ago