சுதந்திர போராட்ட வீரர் பகத் சிங்கின் மருமகன் அபய் சிங் கொரோனாவால் உயிரிழப்பு..!

Default Image

சுதந்திர போராட்ட வீரர் பகத் சிங்கின் மருமகன் அபய் சிங் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு நேற்று உயிரிழந்துள்ளார்.

சமூக ஆர்வலரும் மறைந்த சுதந்திர போராட்ட வீரருமான ஷாஹீத் பகத் சிங்கின் மருமகன் அபய் சிங் சந்து,சில நாட்களுக்கு முன்பு கொரோனா வைரஸ் அறிகுறிகள் காரணமாக மொஹாலியில் உள்ள ஃபோர்டிஸ் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அங்கு அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து,அபய் சிங்கிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில்,சிகிச்சை பலனளிக்காத காரணத்தினால் வெள்ளிக்கிழமை (மே 14) மாலை அபய் சிங் சந்தூ காலமானார்.

இதனையடுத்து,அபய் சிங் சந்துவின் மரணத்திற்கு பஞ்சாப் மாநில முதல்வர் அமரீந்தர் சிங்,மற்றும் காங்கிரஸ் கட்சியினர் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து,அபய் சிங் சந்துவின் மறைவு குறித்து பஞ்சாப் முதலமைச்சர் அமரீந்தர் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது, “நீண்ட காலமாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இறந்த ஷாஹீத்-இ-அஸாம் பகத் சிங் ஜியின் மருமகன் அபய் சிங் சந்து ஜியின் மறைவு குறித்து அறிந்து வருத்தப்படுகிறேன்.அவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கல். அபய் சிங் சந்து ஜியின் சிகிச்சைக்கான முழு செலவை நாங்களே ஏற்றுக்கொள்கிறோம்.வாகேகுரு அவருக்கு நித்திய அமைதியை வழங்கட்டும்”,என்று கூறினார்.

கொரோனா தொற்று காரணமாக இறந்த அபய் சிங் சந்தூ,மறைந்த சுதந்திர போராட்ட வீரர் பகத்சிங்கின் தம்பியான சர்தார் குல்பீர் சிங்கின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்