சுதந்திர போராட்ட வீரர் பகத்சிங்கின் தியாக தினத்தை முன்னிட்டு பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் இன்று பொது விடுமுறை அறிவித்துள்ளார்.
பஞ்சாபின் 18-வது முதலமைச்சராக பகவந்த் மான் புதன்கிழமை பதவியேற்றார்.பஞ்சாப் ஆளுநர் பன்வாரி லால் புரோகித்,மானுக்கு பதவிப் பிரமாணமும் செய்து வைத்தார்.
பகத்சிங்கின் உண்மையான சீடர்:
ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரான அரவிந்த் கெஜ்ரிவால், பகத்சிங்கைப் பற்றித் பஞ்சாப் தேர்தல் பிரசாரங்களிலும், அவரது உரைகளிலும் பலமுறை குறிப்பிட்டுள்ளார்.கெஜ்ரிவால் தன்னை பகத்சிங்கின் உண்மையான சீடர் என்று சொல்லிக் கொள்கிறார். சுதந்திரப் போராட்ட வீரர் மீது கட்சியின் பற்றையும் விசுவாசத்தையும் காட்ட, பகத் சிங்கின் சொந்த கிராமத்தில் பகவந்த் மான் முதல்வர் பதவியை ஏற்றுக்கொண்டார்.
சட்டப்பேரவையில் பேச்சு:
இந்த சூழலில்,பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் மான் பஞ்சாப் சட்டப்பேரவையில் நேற்று பேசிய போது சுதந்திரப் போராட்ட வீரர்களான பகத்சிங்,சுக்தேவ், ராஜ்குரு ஆகியோர் தூக்கிலிடப்பட்ட மார்ச் 23-ஆம் தேதி, மாவீரர் தினத்தையொட்டி பொது விடுமுறை அளிக்கப்படும் என்றும்,பகத்சிங்கின் சொந்த கிராமமான கட்கர் கலன் கிராமத்திற்கு நேரில் சென்று அவருக்கு மரியாதை செலுத்த வேண்டும் என்றும் பஞ்சம மக்களை கேட்டுக் கொண்டார்.
விடுமுறை:
இந்நிலையில்,பஞ்சாப்பில் இன்று பொதுவிடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி,பஞ்சாப்பில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மாவீரர்கள் தினம்:
சுதந்திர போராட்ட வீரர்களான பகத் சிங், சுக்தேவ், ராஜ்குரு ஆகியோர், லாகூர் மத்திய சிறையில், கடந்த 1931 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 23 ஆம் தேதி தூக்கிலிடப்பட்டனர்.இவர்களது நினைவு நாள் மாவீரர்கள் தினம் என அழைக்கப்படுகிறது.இந்நிலையில்,பகத்சிங்கின் நினைவை போற்றும் வகையில் பஞ்சாப்பில் இன்று பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : ஜம்மு காஷ்மீரில் சட்டமன்ற தேர்தல் நிறைவடைந்து சட்டமன்ற கூட்டத் தொடரானது நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று…
சென்னை : நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் இன்று (நவம்பர் 8) தனது 58வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.…
சென்னை : சிவகார்த்திகேயன் ரஜினிகாந்த் மீது வைத்து இருக்கும் அன்பைப் பற்றிச் சொல்லியே தெரியவேண்டாம். சினிமாவிற்குள் வருவதற்கு முன்பு வரை…
சென்னை : மது ஒழிப்பு மாநாட்டின் போது, விசிக - அதிமுக கூட்டணி பேச்சுக்கள் , ஆட்சியில் பங்கு அதிகாரத்தில்…
சென்னை : தங்கம் விலை நேற்று நகை பிரியர்களுக்கு ஆறுதல் தெரிவிக்கும் விதமாக சற்று குறைந்தது. அதாவது, தீபாவளி பண்டிகையை…
சென்னை : தமிழ்நாட்டில் விவசாயம் செழிக்க பேருதவி புரியும் சூரியனை வணங்கும் விதமாக பொங்கல் தினம் ஆண்டுதோறும் ஜனவரி 14இல்…