பகத்சிங் நினைவு தினம்:பள்ளி,கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை!

Default Image

சுதந்திர போராட்ட வீரர் பகத்சிங்கின் தியாக தினத்தை முன்னிட்டு பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் இன்று பொது விடுமுறை அறிவித்துள்ளார்.

பஞ்சாபின் 18-வது முதலமைச்சராக பகவந்த் மான் புதன்கிழமை பதவியேற்றார்.பஞ்சாப் ஆளுநர் பன்வாரி லால் புரோகித்,மானுக்கு பதவிப் பிரமாணமும் செய்து வைத்தார்.

பகத்சிங்கின் உண்மையான சீடர்:

Bhagawant Mann

ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரான அரவிந்த் கெஜ்ரிவால்,  பகத்சிங்கைப் பற்றித் பஞ்சாப் தேர்தல் பிரசாரங்களிலும், அவரது உரைகளிலும் பலமுறை குறிப்பிட்டுள்ளார்.கெஜ்ரிவால் தன்னை பகத்சிங்கின் உண்மையான சீடர் என்று சொல்லிக் கொள்கிறார். சுதந்திரப் போராட்ட வீரர் மீது கட்சியின் பற்றையும் விசுவாசத்தையும் காட்ட, பகத் சிங்கின் சொந்த கிராமத்தில் பகவந்த் மான் முதல்வர் பதவியை ஏற்றுக்கொண்டார்.

சட்டப்பேரவையில் பேச்சு:

இந்த சூழலில்,பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் மான் பஞ்சாப் சட்டப்பேரவையில் நேற்று பேசிய போது சுதந்திரப் போராட்ட வீரர்களான பகத்சிங்,சுக்தேவ், ராஜ்குரு ஆகியோர் தூக்கிலிடப்பட்ட மார்ச் 23-ஆம் தேதி, மாவீரர் தினத்தையொட்டி பொது விடுமுறை அளிக்கப்படும் என்றும்,பகத்சிங்கின் சொந்த கிராமமான கட்கர் கலன் கிராமத்திற்கு நேரில் சென்று அவருக்கு மரியாதை செலுத்த வேண்டும் என்றும் பஞ்சம மக்களை கேட்டுக் கொண்டார்.

விடுமுறை:

Bhagawant Mann

இந்நிலையில்,பஞ்சாப்பில் இன்று பொதுவிடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி,பஞ்சாப்பில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மாவீரர்கள் தினம்:

சுதந்திர போராட்ட வீரர்களான பகத் சிங், சுக்தேவ், ராஜ்குரு ஆகியோர், லாகூர் மத்திய சிறையில், கடந்த 1931 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 23 ஆம் தேதி தூக்கிலிடப்பட்டனர்.இவர்களது நினைவு நாள் மாவீரர்கள் தினம் என அழைக்கப்படுகிறது.இந்நிலையில்,பகத்சிங்கின் நினைவை போற்றும் வகையில் பஞ்சாப்பில் இன்று பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்