பகத்சிங் நினைவு தினம்: பொது விடுமுறை அறிவிப்பு..!

சுதந்திர போராட்ட வீரர் பகத்சிங்கின் தியாக தினத்தை முன்னிட்டு பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் விடுமுறை அறிவித்துள்ளார்.
பஞ்சாபின் 18வது முதலமைச்சராக பகவந்த் மான் புதன்கிழமை பதவியேற்றார்.. பஞ்சாப் ஆளுநர் பன்வாரி லால் புரோகித், மானுக்கு பதவிப் பிரமாணமும் செய்து வைத்தார்.
மார்ச் 23 அன்று அரசு விடுமுறை:
ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரான அரவிந்த் கெஜ்ரிவால், பகத்சிங்கைப் பற்றித் பஞ்சாப் தேர்தல் பிரசாரங்களிலும், அவரது உரைகளிலும் பலமுறை குறிப்பிட்டுள்ளார். கெஜ்ரிவால் தன்னை பகத்சிங்கின் உண்மையான சீடர் என்று சொல்லிக் கொள்கிறார். சுதந்திரப் போராட்ட வீரர் மீது கட்சியின் பற்றையும் விசுவாசத்தையும் காட்ட, பகத் சிங்கின் சொந்த கிராமத்தில் பகவந்த் மான் முதல்வர் பதவியை ஏற்றுக்கொண்டார்.
இந்நிலையில், பஞ்சாபில் பகத்சிங் நினைவு தினம் மார்ச் 23ஆம் தேதியை அரசு விடுமுறையாக பஞ்சாப் அரசு அறிவித்தது. 1931 ஆம் ஆண்டு மார்ச் 23 ஆம் தேதி இந்தியாவின் மூன்று துணிச்சலான மகன்களான பகத் சிங், சுகதேவ் மற்றும் ராஜ்குரு ஆகியோர் ஆங்கிலேய அரசால் தூக்கிலிடப்பட்டனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
உங்கள் குழந்தைகளுக்கு மட்டும் மூன்றுமொழி …வாட் ப்ரோ? விஜய் ஸ்டைலில் பதிலடி கொடுத்த அண்ணாமலை!
February 26, 2025
AFG vs ENG: சாம்பியன்ஸ் டிராபியில் இருந்து வெளியேறப்போவது யார்? ஆப்கானிஸ்தான் பேட்டிங்…
February 26, 2025
“வாட் ப்ரோ? இட்ஸ் வெரி ராங் ப்ரோ” திமுக, பாஜகவை வச்சி செய்த விஜய்!
February 26, 2025