பரதிய ஜனதா அரசை இன்று கண்டித்து நாடு முழுவதும் இன்று ‘பாரத் பந்த்’.. வண்டிகள் ஓடாது..கடைகள் திறக்காது..

Default Image
  • மத்திய பாரதிய ஜனதா அரசின் கொள்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து மத்திய தொழிற்சங்கங்கள் இனைந்து  ஜனவரி 8 அதாவது நாளை நாடு தழுவிய அளவில் “பாரத் பந்த்” நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது,
  • இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்படும் என எதிர்பார்ப்பு.

இந்த பாரத் பந்த் குறித்து அறிவித்துள்ள தொழிற்சங்கங்கள், மத்திய அரசின் தொழிலாளர் விரோத, மக்கள் விரோத, தேசவிரோத கொள்கைகளை கண்டித்து இன்று  நாடு தழுவிய அளவில் வேலைநிறுத்த போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக,  கடந்த 2-ஆம் தேதி தொழிற்சங்க தலைவர்கள் வேலைநிறுத்த நோட்டீசை அளித்ததும் மத்திய தொழிலாளர் அமைச்சகம் சார்பில் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தது. ஆனால் அதில் தொழிலாளர்களின் கோரிக்கைகள் குறித்து எந்த உறுதியும் அளிக்கப்படாததால் எந்த முடிவும் எட்டப்படவில்லை.

Image result for national strike

எனவே, தேசநலனுக்கும், தேச வளர்ச்சிக்கும் விரோதமாக பொதுத்துறை நிறுவனங்கள், இயற்கை வளங்கள் மற்றும் பிற தேசிய சொத்துகளை தனியார்மயமாக்குவதிலும், விற்பதிலும் இந்த பாஜக அரசு தீவிரம் காட்டி வருகிறது. ஏற்கனவே 12 விமான நிலையங்கள் தனியாருக்கு விற்கப்பட்டுவிட்டது. அரசு தொலை தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல்.-எம்.டி.என்.எல். இணைப்பின் மூலம் 93 ஆயிரம் ஊழியர்கள் விருப்ப ஓய்வு என்ற பெயரில் தங்கள் வேலையை இழந்துள்ளனர். இதேபோல் இந்திய ரயில்வேயை தனியார்மயமாக்கும் நடவடிக்கைகள் தற்போது எடுக்கப்படுகிறது என்றும் கூறுகின்றனர்.  எனவே மத்திய அரசின் தொழிலாளர் விரோத மற்றும் மக்கள் விரோத, இந்த நாட்டின்  தேசவிரோத கொள்கைகளை கண்டித்து நாளை இந்திய நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டம்  நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டத்திற்க்கு,  அனைத்து இந்திய ஐக்கிய தொழிற்சங்க மையம், இந்திய தொழிற்சங்கங்களின் மையம், அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸ், ஹிந்து மஜ்தூர் சபா, சுயதொழில் மகளிர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் தங்களது ஆதரவை தெரிவித்துள்ளனர். மேலும் அகில இந்திய மத்திய தொழிற்சங்க கவுன்சில், தொழிலாளர் முற்போக்கு கூட்டமைப்பு, ஐக்கிய தொழிற்சங்க காங்கிரஸ், இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் மற்றும் தொழிற்சங்க ஒருங்கிணைப்பு மையம் ஆகிய தொழிற்சங்கங்களும் இந்த  போராட்டத்திற்கு தங்கள் ஆதரவை  அளித்துள்ளனர்.

Image result for national bandh

இதேபோல் அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம், அகில இந்திய வங்கி அலுவலர்கள் சங்கம், இந்திய வங்கி ஊழியர் கூட்டமைப்பு, இந்திய தேசிய வங்கி ஊழியர் கூட்டமைப்பு, இந்திய தேசிய வங்கி அதிகாரிகள் காங்கிரஸ் ஆகிய வங்கித் துறை சார்ந்த தொழிற்சங்கங்களும் போராட்டத்திற்கு ஆதரவுக் கரம் நீட்டியுள்ளன. இதனால் வங்கி சேவையும் பாதிக்கப்படும். மேலும், அரசு ஊழியர்கள், வங்கி ஊழியர்கள், தொழிற்சங்கங்கள் என பல்வேறு துறைகளை சார்ந்த சுமார் 25 கோடி பேர் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாடு தழுவிய போராட்டத்தால். மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும்என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால், இந்த மக்கள் விரோத போராட்டத்திக்கு, ஆர்.எஸ்.எஸ் ஆதரவு தொழிற்சங்கங்கள் தங்கள் ஆதரவை  அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. எனவே இந்த நாடுதழுவிய போராட்டத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Election Result
tvk party
orange alert
Minister Sekarbabu
Priyanka Gandhi
AUS vs IND , KL Rahul - Jaiswal
amaran ott