BGMI மோகத்தால் விபரீத முடிவு.! சிகிச்சைக்கு பின் உயிர் தப்பிய இளைஞன்!
பீகார் : கேம் விளையாடுவதற்கு அனுமதி மறுக்கப்பட்ட இளைஞர் ஒருவர், சாவி, கத்தி, நக வெட்டிகளை விழுங்கியதால் பரபரப்பை கிளப்பியுள்ளது.
பீகார் மாநிலத்தை சேர்ந்த அந்த இளைஞன், (பிஜிஎம்ஐ) என்ற ஆன்லைன் மொபைல் கேமை இடைவிடாமல் விளையாடி வந்துள்ளார். வீட்டில் எந்த ஒரு வேலையும் செய்யாமல் அந்த கேமை விளையாட இடைவிடாமல் விளையாடி வந்ததால், அவரது குடும்பத்தினர் மொபைல் போனை புடுங்கி வைத்து கேம் விளையாட அனுமதி மறுத்துள்ளனர்.
இதனால், ஆத்திரமடைந்த சாவிக் கொத்து, 2 நக வெட்டிகள், கத்தி ஆகிய பொருட்களை அடுத்தடுத்து விழுங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், முதலில்அவருக்கு ஒன்றும் செய்யவில்லை என்றால், சில மணிநேரங்கள் கழித்து அவரது உடல்நிலை மோசமடைந்துள்ளது.
வலியால் துடிக்க தொடங்கியதும், அவரது குடும்பத்தினர் மோதிஹாரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு எக்ஸ்ரே மூலம் அவரது வயிற்றில் கூர்மையான பொருட்கள் இருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து, அந்த நபருக்கு 1.5 மணிநேர அறுவை சிகிச்சைக்கு பிறகு வயிற்றில் இருந்த பொருட்களை மருத்துவர்கள் பத்திரமாக அகற்றியுள்ளனர். அறுவை சிகிச்சை செய்யப்பட்டு தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளது.