ஜாக்கிரதை : அயோத்தி ராமர் கோயில் சிறப்பு அழைப்பிதழ்.! இணையவழி மோசடிகள்…

Ayodhi Ram Temple - Scam

வரும் ஜனவரி 22 ஆம் தேதி உத்திர பிரதேச மாநிலம் அயோத்தியில் புதியதாக கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலில் கும்பாபிஷேக விழா (Ram Mandir – Pran Pratishtha)  வெகு சிறப்பாக நடைபெற உள்ளது. இந்த விழாவில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

முதல் நாள் சுமார் 6 ஆயிரம் பேருக்கு அழைப்பிதழ் கொடுக்கப்பட்டுள்ளது . இருந்தும்,  குறிப்பிட்ட முக்கிய விஐபிகளுக்கு மட்டுமே ராமர் கோயிலை ஜனவரி 22ஆம் தேதி தரிசிக்க அனுமதிக்கப்படுவர். மீதம் உள்ளவர்கள் அருகில் உள்ள கோயிலில் மட்டுமே தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சியில் உள்ள இந்துக்கள் அயோத்தி செல்ல உரிமை உள்ளது.! ஆனால்.? சசிதரூர் கருத்து.!

இப்படியான சூழலில் ராமர் கோயில் விழாவை பயன்படுத்தி சில மோசடி கும்பல், ஸ்மார்ட் போன் மூலமாக பொதுமக்களை ஏமாற்ற புதிய யுக்தியை கையாண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜனவரி 22ஆம் தேதி அயோத்தி ராமர் கோயில் செல்வதற்கான சிறப்பு அழைப்பிதழ் இருப்பதாகவும், பணம் கொடுத்து அதனை பெற்றுகொள்ளும்படியும் அதில் அறிவுறுத்தப்பட்டு வருகிறதாக  தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜனவரி 22 அன்று ராம் மந்திர் விழாவில் இலவச விஐபி நுழைவு அழைப்பிதழ் இருப்பதாக கூறி, பயனர்களை கவர்ந்திழுக்கும்படியான தவறான வாட்ஸ்அப் செய்திகளை அனுப்புகின்றனர். இந்த செய்தியை சிலர் ராமர் கோயில் விழா அழைப்பாக கருதி அதில் குறிப்பிட்டுள்ள லிங்கை கிளிக் செய்து விடுகின்றனர்.  அல்லது அதில் கோரப்பட்டுள்ள மொபைல் அப்ளிகேஷனை  பதிவிறக்கிவிடுகின்றனர்.

மேலும், ராமர் கோயில் விழாவில் கலந்துகொள்ள ஆர்வமுள்ள மற்றவர்களுக்கும் இதனை அனுப்பவும் பயனர்களை ஊக்குவிக்கின்றனர். இதன் மூலம் இந்த மோசடி மற்றவர்களுக்கும் பரப்பப்படுகிறது.  அந்த செய்தியில், “ஜனவரி 22 அன்று ராம் மந்திர் திறப்பு விழாவில் விஐபி அழைப்பிதழ் “, “ஜெய் ஸ்ரீ ராம்” போன்ற வாசகங்களை இடம் பெற்றுள்ளன.

‘ராம் ஜென்மபூமி க்ரிஹ்சம்பர்க் அபியான் செயலி’ (Ram Janmabhoomi Grihsampark Abhiyan.APK) என பெயரிடப்பட்ட APK கோப்பை உள்ளடக்கிய இந்த செய்திகள், பயனர்களுக்கு இணையவழி அச்சுறுத்தல்களை ஏற்படுத்துகின்றன. இந்தச் செய்திகள் மூலம் தனிப்பட்ட தகவல் மற்றும் பயனர்களின் போன்கள் ஹேக் செய்யப்படுகின்றன என பொதுமக்கள் கவனமுடன் இருக்க இணையத்தில் பல்வேறு விழிப்புணர்வு செய்திகள் வெளியாகி வருகின்றன.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்