பாஜக இராவணர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள் – அகிலேஷ் யாதவ்!

பாஜக இராவணர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள் என சமாஜ்வாதி தொண்டர்களுக்கு அகிலேஷ் யாதவ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சமாஜ்வாதி கட்சி சார்பில் நடைபெற்ற விஸ்வகர்மா ஜெயந்தி விழா நிகழ்ச்சியில் முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சித் தலைவருமாகிய அகிலேஷ் யாதவ் கலந்து கொண்டு பேசியுள்ளார். அப்போது பேசிய அவர், சமூக வலைதளங்களில் பயிற்சி பெற்ற இராமணர்கள் பயன்படுத்தப்படுகிறார்கள்.
பாஜக மக்களிடம் பல பொய்யான தகவல்களையும், குழப்பங்களை ஏற்படுத்தும். எனவே, அவர்களிடமிருந்து எச்சரிக்கையாக இருங்கள் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் கொரோனா ஊரடங்கின் பொழுது அதிக பணம் படைத்தவர்களுக்கு விமான சேவையை இயக்கிய மத்திய அரசு, ஏழை மக்களுக்கான ரயில் மற்றும் பேருந்து போக்குவரத்தை நிறுத்தியது எனவும் அவர் சுட்டிக்காட்டி பேசியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்து! 3 பேர் உயிரிழப்பு!
April 26, 2025
திறந்தவெளி வாகனத்தில் விஜய்., ஸ்தம்பித்த கோவை விமான நிலையம்!
April 26, 2025