ஜாக்கிரதை: நாளை விளக்கு ஏற்றுவதற்கு முன் ஆல்கஹால் கலந்த சானிடைசர் பயன்படுத்த வேண்டாம்.!

Default Image

பிரதமர் மோடி நேற்று காணொளி காட்சி மூலம் கொரோனா வைரஸ்  தடுப்பு நடவடிக்கைகள் குறித்து நாட்டு மக்களுக்கு ஒரு வீடியோ செய்தி வெளியிட்டார். அதில் ஊரடங்கை கடைபிடிப்பதில் நாம் உலகளவில் முன்னுதாரணமாக இருந்து வருகிறோம். அரசுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறீர்கள். நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து கொரோனாவுக்கு யுத்தம் நடத்தியதற்கு நன்றி என பிரதமர் மோடி கூறினார். 

இதையெடுத்து வரும் ஏப்ரல் 5-ம் தேதி நாளை இரவு 9 மணி முதல் 9 நிமிடங்கள் வீட்டின் மின்விளக்கை அணைத்துவிட்டு, மெழுவர்த்தி, டார்ச் மற்றும் அகல் விளக்குகளை ஏற்ற வேண்டும் என தெரிவித்தார். இந்த நிலையில் நாளை மெழுகுவர்த்தி, அகல்விளக்கை ஏற்றுவதற்கு முன் ஆல்கஹால் கலந்த சானிடைசர் பயன்படுத்த வேண்டாம் என்றும் அதற்கு பதில் கைகளை சோப்பு போட்டு மட்டும் கழுவி விட்டு, பின்னர் விளக்கேற்றும்படி இந்திய ராணுவம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் பொதுமக்கள் அலட்சியத்தை குறைத்து சற்று விழிப்புடன் இருக்குமாறு வலியுறுத்தியுள்ளது. 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்