ஆதார் அட்டை நகலை எங்கும் கொடுக்க வேண்டாம் என்ற அறிவிப்பை திரும்பப் பெறுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.முன்னதாக, ஹோட்டல்கள்,திரையரங்குகள் உள்ளிட்ட எந்தவொரு உரிமம் பெறாத தனியார் நிறுவனத்துடனும் ஆதார் அட்டை நகலைப் பகிரக்கூடாது என்றும்,அவை தவறாகப் பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளது எனவும் மத்திய அரசு எச்சரித்திருந்தது.இது தொடர்பாக,மத்திய அரசு ஏற்கனவே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
“பயனர் உரிமம் பெற்ற நிறுவனங்கள் மட்டுமே ஒரு நபரின் அடையாளத்தை நிறுவ ஆதாரை பயன்படுத்த முடியும்.மாறாக, ஹோட்டல்கள் அல்லது திரையரங்குகள் போன்ற உரிமம் பெறாத தனியார் நிறுவனங்கள் ஆதார் அட்டையின் நகல்களை சேகரிக்கவோ வைத்திருக்கவோ அனுமதிக்கப்படுவதில்லை.,இது ஆதார் சட்டம் 2016 இன் கீழ் குற்றமாகும்.UIDAI இலிருந்து சரியான பயனர் உரிமம் உள்ளதா என்பதைச் சரிபார்க்க வேண்டும்.
மேலும்,அடையாள சரிபார்ப்பு நோக்கத்திற்காக,தனித்துவமான 12 இலக்க எண்ணின் கடைசி 4 இலக்க எண்களை மட்டுமே காட்டும் வகையிலான ஆதார் அட்டையை பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ள வேண்டும்”,என்று தெரிவித்திருந்தது.அதன்படி,UIDAI இன் அதிகாரப்பூர்வ இணையதளமான https://myaadhaar.uidai.gov.in/ இலிருந்து ஆதார் எண்ணின் கடைசி 4 இலக்கங்களை மட்டும் காட்டும் ஆதாரைப் பதிவிறக்கம் செய்து பயன்படுத்த வேண்டும்” என மத்திய அரசு தெரிவித்திருந்தது.
இந்நிலையில்,மத்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் இந்த அறிவிப்பு பெரும் சர்ச்சையான நிலையில், தற்போது இந்த அறிக்கையை மத்திய அரசு திரும்ப பெற்றுள்ளது. குறிப்பாக,ஆதார் அட்டையை எப்போதும் போல பயன்படுத்தலாம் எனவும்,ஆனால்,ஆதார் விவரங்களை பகிரும் போது மிகக் கவனமாக இருக்க வேண்டும் எனவும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
இருப்பினும்,பத்திரிகை செய்தியினை மக்கள் தவறாக புரிந்து கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதைக் கருத்தில் கொண்டு, முன்னர் வெளியிட்ட சுற்றறிக்கையை மத்திய அரசு திரும்பப் பெற்றுள்ளது.மேலும்,தனிப்பட்ட ஆதார் அட்டையில் விவரங்கள் பாதுகாக்கப்படுவதாகவும்,தனிப்பட்ட விவரங்கள் கசிவுக்கு எந்த வாய்ப்பும் இல்லை எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…