ஜாக்கிரதை!ஆதார் விவரங்களை பகிரக்கூடாது – சுற்றறிக்கையை திரும்ப பெற்ற மத்திய அரசு!

Default Image

ஆதார் அட்டை நகலை எங்கும் கொடுக்க வேண்டாம் என்ற அறிவிப்பை திரும்பப் பெறுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.முன்னதாக, ஹோட்டல்கள்,திரையரங்குகள் உள்ளிட்ட எந்தவொரு உரிமம் பெறாத தனியார் நிறுவனத்துடனும் ஆதார் அட்டை நகலைப் பகிரக்கூடாது என்றும்,அவை தவறாகப் பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளது எனவும் மத்திய அரசு எச்சரித்திருந்தது.இது தொடர்பாக,மத்திய அரசு ஏற்கனவே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

“பயனர் உரிமம் பெற்ற நிறுவனங்கள் மட்டுமே ஒரு நபரின் அடையாளத்தை நிறுவ ஆதாரை பயன்படுத்த முடியும்.மாறாக, ஹோட்டல்கள் அல்லது திரையரங்குகள் போன்ற உரிமம் பெறாத தனியார் நிறுவனங்கள் ஆதார் அட்டையின் நகல்களை சேகரிக்கவோ வைத்திருக்கவோ அனுமதிக்கப்படுவதில்லை.,இது ஆதார் சட்டம் 2016 இன் கீழ் குற்றமாகும்.UIDAI இலிருந்து சரியான பயனர் உரிமம் உள்ளதா என்பதைச் சரிபார்க்க வேண்டும்.

மேலும்,அடையாள சரிபார்ப்பு நோக்கத்திற்காக,தனித்துவமான 12 இலக்க எண்ணின் கடைசி 4 இலக்க எண்களை மட்டுமே காட்டும் வகையிலான ஆதார் அட்டையை பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ள வேண்டும்”,என்று தெரிவித்திருந்தது.அதன்படி,UIDAI இன் அதிகாரப்பூர்வ இணையதளமான https://myaadhaar.uidai.gov.in/ இலிருந்து ஆதார் எண்ணின் கடைசி 4 இலக்கங்களை மட்டும் காட்டும் ஆதாரைப் பதிவிறக்கம் செய்து பயன்படுத்த வேண்டும்” என மத்திய அரசு தெரிவித்திருந்தது.

இந்நிலையில்,மத்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் இந்த அறிவிப்பு பெரும் சர்ச்சையான நிலையில், தற்போது இந்த அறிக்கையை மத்திய அரசு திரும்ப பெற்றுள்ளது. குறிப்பாக,ஆதார் அட்டையை எப்போதும் போல பயன்படுத்தலாம் எனவும்,ஆனால்,ஆதார் விவரங்களை பகிரும் போது மிகக் கவனமாக இருக்க வேண்டும் எனவும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இருப்பினும்,பத்திரிகை செய்தியினை மக்கள் தவறாக புரிந்து கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதைக் கருத்தில் கொண்டு, முன்னர் வெளியிட்ட சுற்றறிக்கையை மத்திய அரசு திரும்பப் பெற்றுள்ளது.மேலும்,தனிப்பட்ட ஆதார் அட்டையில் விவரங்கள் பாதுகாக்கப்படுவதாகவும்,தனிப்பட்ட விவரங்கள் கசிவுக்கு எந்த வாய்ப்பும் இல்லை எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

aadhar

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்